Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் சென்னையில் தான் குறைந்த கட்டணத்தில் ஹோட்டல்:

இந்தியாவில் உள்ள ஹோட்டல்களில் சென்னையில் மட்டும் தான் குறைந்த விலைக்கு ரூம்கள் கிடைக்கின்றது. மற்ற மெட்ரோ நகரங்களை விடவும் சென்னையில் வசூலிக்கப்படும் கட்டணம் மிகவும் குறைவு. இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி மும்பை,கொல்கத்தாவை விட 10 சதவிகிதம் குறைவாக உள்ளது.

டெல்லியில் சராசரியாக ஒரு நாளைக்கு 6700 ரூபாய் என்ற அளவிலும், கொல்கத்தாவில் 6500 ரூபாய் என்ற அளவிலும் உள்ளது. இதனைவிட மும்பை தான் ஹோட்டல்களுக்கு அதிக விலையில் கட்டணம் வசூலிக்கும் நகரமாக உள்ளது.இந்த ஆண்டில் மட்டும் சென்னையில் விலை 8 சதவிகிதம் குறைந்துள்ளது என ஹோட்டல்.காம் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் டெல்லி, மும்பை நகரங்களில் ஹோட்டல் கட்டணம் முறையே 1 மற்றும் 2 சதவிகிதம், குறைந்துள்ளன. ஆனால் கொல்கத்தாவில் மட்டும் விலை 4 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ