Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காவல்துறையில் பெண்களுக்கு 33 % இடஒதுக்கீடு

மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பிபிஆர்&டி அறிக்கையின் படி இந்தியாவில் மொத்தம் உள்ள 15.85 லட்சம் போலீஸ்களில் வெறும் 84,479 பேர் மட்டுமே பெண்கள் என்று தெரிவித்துள்ளது.



 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 20062 பெண் காவலர்களும், அதற்கடுத்தபடியாக தமிழ்நாட்டில் 10118 பெண் போலீஸ்களும் உள்ளனர்.

மற்ற மாநிலங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர்.உயர் பதவிகளில் உள்ளவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்பதால் காவல்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கிடு 33% அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ