Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.எஃப். உச்சவரம்பில் விரைவில் மாற்றம்!!

ஊழியர்கள் பெறும் ஒரு மாதத்திற்கான அடிப்படைச் சம்பள அடிப்படையில் கணக்கிடப்பட்டு பி.எஃப்பிற்கான உச்சவரம்பு ரூ.6,500 ஆக உள்ளது.பி.எஃப் சட்டத்தின்படி ஊழியர்கள் தங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதம் செலுத்த வேண்டும். இதில் ஊழியரின் பங்களிப்போடு தங்களின் பங்களிப்பாக நிறுவனங்களும் 12 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

இதில் மாற்றம் கொண்டு வந்து பி.எஃப்.பிடித்தத்திற்கான உச்ச வரம்பை 6500 ரூபாயிலிருந்து 15,000 ரூபாய்க்கும், குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை 1000 ரூபாயாகவும் நிர்ணயித்து நடைமுறைபடுத்த முந்தைய அரசு அனுமதி அளித்துவிட்டாலும் தேர்தல் நடைமுறைக்கு எதிரானது என இந்த ஒப்புதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது புதிய அரசு அமைந்துள்ளதால் மீண்டும் இந்த ஒப்புதலுக்கு அனுமதி வழங்க புதிய அரசும் ஆர்வம் காட்டி வருவதால் இது விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இ.பி.எஃப்.ஓவில் 8 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். இந்த மாற்றத்தால் 20 லட்சம் ஓய்வூதியர்கள் பயனடைவார்கள் எனவும் கூறப்படுகிறது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ