Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு லட்சம் பெண் ஊழியர்கள் என்ற இலக்கை நெருங்குகிறது டிசிஎஸ்!!

இந்தியாவின் முன்னனி ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.கடந்த 2013-14 நிதியாண்டு அறிக்கையின் படி டிசிஎஸ் நிறுவனத்தில் 98,122 பெண்கள் பணிபுரிகின்றனர். நிறுவனத்தில் மொத்தம் 3 லட்சம் பேர் வேலை செகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.டி துறையில் 25 முதல் 33 சதவிகிதம் வரை பெண்கள் இந்தியா முழுவது உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். மேலும் ஐடி துறையில் வேலை செய்யும் பெண்களின் சதவிகிதம் அதிகரித்து வருகிறது.

பெண்கள் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் நிறுவனங்களும் அவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளையும் அதிகரித்து வருகிறது. மொபைல் ஆப்ஸ், இலவச தொடர்புக்கான நம்பர் என பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது டிசிஎஸ். ஒரு லட்சம் பெண் ஊழியர்கள் என்ற எண்ணிக்கையை எட்டினால் இந்தியாவில் ஒரு லட்சம் பெண் ஊழியர்களை கொண்ட முதல் நிறுவனம் என்ற பெருமையை பெறும் டிசிஎஸ் நிறுவனம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP