Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500 மில்லியன் டாலர் செலவில் மீண்டும் பயணிக்க தயாராகும் டைட்டானிக்!

வரலாற்றில் மறக்க முடியாத டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி 100 வருடங்களை கடந்துவிட்டது. சென்ற நூற்றாண்டின் மிக மோசமான கடல் விபத்தாக வரலாற்றில் பதிவானது. இந்த நிலையில், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு புதிய டைட்டானிக் கப்பல் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

வரும் 2016ம் ஆண்டில் புதிய டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை துவங்கும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பயணம் செய்த அதே வழியிலேயே இந்த புதிய டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தை துவங்க இருப்பதாக கூறப்படுகிறது..இதற்கான செலவு சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் என கூறப்படுகிறது.

மேலும், பழைய டைட்டானிக் கப்பலின் வடிவமைப்பை பயன்படுத்தியே புதிய கப்பலும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகள் அனைத்தும் பழைய டைட்டானிக் கப்பலின் அடிப்படையிலேயே இருக்கும். கூடவே  செயற்கைகோள் இணைப்பு, தொலைதொடர்பு வசதிகள் என கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த டைட்டானிக் கப்பல் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த க்ளைவ் பால்மர் அவரது புளூ ஸ்டார் லைன் கப்பல் நிறுவனத்திற்காக இந்த டைட்டானிக்- 2 கப்பலை உருவாக்கி வருகிறார். பழைய டைட்டானிக் கப்பல் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கப்பலில் வசதிகளுக்கு தகுந்தவாறு மூன்று வகுப்புகள் இருக்கும்.

அவசர உதவிக்கு கப்பலில் பயணிக்கும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு ஏற்ற எண்ணிக்கையில் பாதுகாப்பு படகுகள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானிக்-2 என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்தக் கப்பலில் முதல் பயணத்தின்போது 2,600 பயணிகளும், 900 கப்பல் பணியாளர்களும் செல்ல இருப்பதாக க்ளைவ் பால்மர் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ