Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்டார் அலையன்ஸ் கூட்டு: ஏர் இந்தியா வருமானம் 5% உயர வாய்ப்பு

ஏர் இந்தியா நிறுவனம் ஸ்டார் அலையன்சுடன் இணைவதின் மூலம் ஏர் இந்தியா வருமானம் நான்கு முதல் ஐந்து சதவிகிதம் உயர வாய்ப்புள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ பூசப்பட்டி தெரிவித்துள்ளார். ஸ்டார் அலையன்ஸ் கிளப்புடன் ஏர் இந்தியா இணைப்பை அசோக் லவாஸா, செயலர், விமான போக்குவரத்து துறை, ரோஹித் நந்தன் தலைமை மேலாண் இயக்குனர், ஏர் இந்தியா மற்றும்  ஜேப்பரி கோ, தலைமை செயல் அதிகாரி, ஸ்டார் அலையன்ஸ் ஆகியோர் முன்னிலையில் இதனை அமைச்சர் தெரிவித்தார்.

உலகளவில் பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனமாக உள்ள ஸ்டார் அலையன்ஸ் நிறுவனம் உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கிவரும் அனைத்து சலுகைகளையும், ஏர் இந்தியா பயணிகளுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 26 முன்னணி ஏர்லைன்ஸை நிறுவனங்களுடன் ஸ்டார் அலையன்ஸ் கூட்டுக் கொண்டுள்ளது. . 195 நாடுகளில், 1328 விமான நிலையத்திலிருந்து தினசரி 21,900 விமான போக்குவரத்தை இந்த நிறுவனம் அளித்து வருகிறது. தற்போது 13 ஸ்டார் மேம்பர் ஏர்லைன்ஸ் இந்தியாவில் 10 இடங்களுக்கு விமான போக்குவரத்தை வழங்குகிறது. இது இந்தியாவின் போக்குவரத்து சந்தையின் 30 சதவிகிதமாகும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close