Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வீட்டுக் கடன் விழிப்புணர்வு விவரங்கள்!

கான்சர்ட் அமைப்பு வீட்டுக் கடன் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன் முடிவுகள் வருமாறு:
ஒப்பீட்டு ஆய்வில் அறியப்பட்டவை:
 

94%  வங்கி / நிறுவனங்கள் நிபந்தனை மற்றும் விதிகளை தெரிவித்ததாக கூறினார்.

96 சதவிகிதத்தினர் எந்த சிரமுமன்றி கேட்ட ஆவணங்களை வழங்கினர். 

86.5 சதவிகிதத்தினர் ஆவணங்களின் நகலைப் பெற்றுக் கொண்டனர்.
மேற்படி விவரங்களிலிருந்து நுகர்வோரிடம் வீட்டுக் கடன் பற்றி விழிப்புணர்வு அதிகமாகவே இருப்பதாக அறியப்பட்டது.
அந்த வங்கியில் கடன் பெற்றதற்கு வட்டி வீதம் காரணமென 22 சதவிகிதம் பேரும் அணுகிய முறை என 31.5 சதவிகிதம் பேரும் கருத்துத் தெரிவித்தனர்.

65 சதவிகிதத்தினர் தங்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதும் செயல்படுத்தும் கட்டணம் திரும்பத் தருவதில்லை என புகார் தெரிவித்தனர்.
80 சதவிகிதத்தினர் இடையில் ஏஜென்ஸிகள் இன்றி நேரிடையாக வங்கியை அணுகிக் கடன் பெற்றனர்.
47 சதவிகிதத்தினர் விண்ணப்படிவம் பெற்ற 15 முதல் 30 நாட்களுக்கும், 3 சதவீதத்தினர் 7 நாட்களுக்கும் கடன் ஒப்புதல் பெற்றதாக தெரிவித்தனர்.
80 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர், வங்கிகள் பல முறைகள் கூடுதல் விவரம் கேட்கின்றனர் என புகார் தெரிவித்தனர்.

41.5 சதவிகிதத்தினர் தங்கள் கடன் பெற்ற வங்கியுடன் நல்ல உறவு முறையில் செயல் படுவதாகத் தெரிவித்தனர்.
இதில் 20 சதவிகிதம் பேர் 15 விண்ணப்ப படிவம் பெறவே நட்களுக்கு மேல் ஆனாது.
விண்ணப்பம் வழங்கிய நாளிலிருந்து கடன் தொகை வழங்க எடுத்துக் கொண்ட காலம்
47 சதவிகிதம் பேர் கடன் பெற 7 நாட்களுக்கு மேல் தர தாமதம் ஆவதாகத் தெரிவித்தனர்.
மதிப்பீடு கொடுத்த மொத்தம் 2316 பேரில் 62 பேர் மட்டுமே “புகார் ஏதுமில்லை” எனத் தெரிவித்தனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ