Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிகரெட் மீதான வரியை அதிகரிக்க பரிந்துரை!

 வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் சிகரெட்க்குக்கான விலையை உயர்த்த  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம்,சுகாதார துறையமைச்சர்  கோரிக்கை விடுத்துள்ளார். மெட்ரோ நகரங்களில் எம்.ஆர்.பி விலையை விட  கூடுதல் விலைக்கு விற்கப்பட்டுவரும் சிகரெட்களின் விலையை அதிகரிக்க  வேண்டும். அதாவது தற்போது உள்ள விலையிலிருந்து 40 முதல் 60  சதவிகிதம் வரை வரியை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
 
 இதன் மூலம் ஆண்டுக்கு அரசாங்கத்திற்கு 3800 கோடி வருமானம் கிடைக்க  வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இது சிறிய மற்றும் பெரிய அளவிலான அனைத்து சிகரெட்களுக்கும் பொறுந்தும் என்று தெரிவித்துள்ளார். இதன் படிபார்க்கும் போது சராசரியாக 4 ரூபாய்க்கு விற்கப்படும் சிறிய சிகரெட் 6 ரூபாய் என்ற அளவிலும். 8 ரூபாய்க்கு விற்கப்படும் சிகரெட் 12 ரூபாய்க்கும் விற்கப்படும். நீண்ட சிகரெட்களின் விலை 16 ரூபாய் வரை செல்லும் என்று கூறப்படுகிறது.
 
இந்த வரியேற்றத்திற்கு காரணம் அதிக விலை விதிப்பது அதிகமாக வாங்குவதை குறைக்கும் என்ற நோக்கத்தில் இந்த விலையேற்றம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி சென்ற ஆட்சியில் 19 சதவிகிதம் உயர்த்தப்பட்ட்து ஆனால் அது போதுமானதாக இல்லை என்பதால் தற்போது இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ