Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சச்சின் உருவம் பொறித்த நாணயம் கெளரவித்த கிழக்கிந்திய கம்பெனி!

இங்கிலாந்தின் பழமையான நிறுவனங்களில் ஒன்றான கிழக்கிந்திய கம்பெனி சமீபத்தில் வெளியிட்டுள்ள தங்க நாணயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கரின் உருப்படத்தை பொறித்து வெளியிட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சாதனையான உலகிலேயே முதல் முறையாக  200 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையை கெளரவிக்கும் விதமாக இந்த நாணயம் வெளியடப்பட்டுள்ளதாகவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனை கெளரவிப்பதில் பெருமையடைவதாகவும்  கிழக்கிந்திய நிறுவனம் கூறியுள்ளது. 
 
மேலும் குறைந்த எண்ணிக்கையில் லிமிடெட் எடிஷன் நாணயமாக 12,000 பவுண்ட்டுக்கும், 1499 பவுண்டிற்கு மற்றொரு தங்க நாணயத்தையும், 69.95 பவுண்ட் மதிப்புள்ள வெள்ளி நாணயத்தையும் வெளியிட்டு கெளரவித்துள்ளது.இதேபோன்று இரணடாம் எலிசபத்தின் உருவம் பொறித்த நானயங்களும் வெளியிடப்பட்டுள்ளன. கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் டெண்டுல்கருக்கு இது மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடான இங்கிலாந்து இந்த பெருமையை டெண்டுல்கருக்கு அளித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
இறக்குமதி காரணங்களால் இந்தியாவில் இந்த நாணயம் இன்னும் விலைக்கு வரவில்லை. 1600ம் ஆண்டு முதலாம் குயின் எலிசபேத்தால் அனுமதி வழங்கப்பட்டு தொடங்கப்பட்ட கிழக்கிந்திய நிறுவனம் தான் இந்தியாவில் முதலில் வணிகம் செய்ய வந்த நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ