Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் விரைவில் 90 தபால் ஏடிஎம்

சென்னை மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் பயனைடையுமாறு சென்னை மண்டலத்தில் விரைவில் 90 ஏடிஎம்கள் திறக்கப்பட உள்ளதாக சென்னை அஞ்சல்துறை தலைவர் மெர்வில் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
 
இது மேலும் கர்நாடகா, அசாம்,டெல்லி மோன்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அவர். அஞ்சலங்களில் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், அதனை முதியோரிடம் கொண்டு சேர்க்கும் அஞ்சல் அலுவலகருக்கு எந்தவித கமிஷனும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
 
பணம் பட்டுவாடா செய்யும் அஞ்சல் அலுவலர் கமிஷன் கேட்டால் அஞ்சல்துறைக்கு புகார் தெரிவிக்கவும், அந்த அலுவலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ