Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்யம் சினி ப்ளக்ஸை வாங்குகிறது ஐனாக்ஸ்

சினிமாத்துறையில் அனைத்து நகரங்களிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியாக ஐனாக்ஸ் மற்றொரு முன்னனி சினிப்ளக்ஸ் நிறுவனமான சத்யம் சினி ப்ளக்ஸை விலைக்கு பேச்சு வார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.
 
44 நகரங்களில் 80 மல்டி ப்ளக்ஸ்களில் 313 ஸ்கிரீன்களை கொண்டு இயங்கிவரும் ஐனாக்ஸ் தற்போது சிறிய நகரங்களான ஜம்மு மற்றும் மங்களூரிலும் தன் வியாபாரத்தை நிலைநிறுத்த இந்த வர்த்தகத்தில் ஈடுபடப்போவதாக தெரிகிறது.
 
ஏற்கனவே வட இந்தியாவில் 6 நகரங்களில் 9 மல்டிப்ளக்ஸ்களில் 38 ஸ்கிரீன்களோடு இயங்கிவரும் சத்யம் சினி ப்ளக்ஸை வாங்குவது வட இந்தியாவில் வர்த்தகத்தை விரிவுபடுத்த உதவும் என்பதால் இந்த இணைப்பு லாபகரமானதாக இருக்கும் என ஐனாக்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே 2007ல் ஐனாக்ஸ் கல்கத்தா சினிமா பிரைவேட் நிறுவனத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close