Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அட்வான்ஸ் டேக்ஸ் : அதிகம் கட்டிய ஆயில் நிறுவனங்கள்

இந்த வருட ஜூன் காலாண்டிற்கான அட்வான்ஸ் டேக்ஸை கட்ட ஜூன் 15ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அட்வான்ஸ் டேக்ஸ் கட்டிய டாப் 100 நிறுவனங்களில் மட்டும் சென்ற ஆண்டு ஜூன் காலாண்டைவிட இந்த ஆண்டு ஜூன் காலாண்டில் அட்வான்ஸ் டேக்ஸ் 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இதில் குறிப்பாக எண்னெய் நிறுவனங்களான பாரத் பெட்ரொலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் முறையே 48 மற்றும் 56 சதவிகிதம் அதிகமாக அட்வான்ஸ் டேக்ஸ் கட்டியுள்ளன. காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி நிறுவனம் 849 கோடியை வரியாக கட்டியுள்ளது இது சென்ற ஆண்டைவிட 20 சதவிகிதம் அதிகமாகும்.

வங்கிகளில் ஹச்.டி.எஃப்.சி மற்றும் ஐசிஐசிஐ முறையே 16 மற்றும் 14 சதவிகிதம் அதிகமாக முன் கூட்டிய வரியை கட்டியுள்ளன. ரிலையன்ஸ் 7 சதவிகிதமும், எஸ்.பி.ஐ 3 சதவிகிதமும் அதிகமாக செலுத்தியுள்ளன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ