Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனியார் இன்ஷூரனஸ் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு உயர்வு.

2013-14 ம் நிதியாண்டில் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு விகிதம் 44 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மந்தமான பொருளாதார நிலையிலும்  தனியார் நிறுவனங்கள் இதை செய்துள்ளன என ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.  

பிரீமியம் வசூல்  அடிப்படையிலான சந்தை பங்களிப்பு 42.77 சதவிகிதத்திலிருந்து 44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  

அதே நேரத்தில் பொதுதுறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பானது 57.04 சதவிகிதத்திலிருந்து 55.84 சதவிகிதமாக குறைந்துள்ளது.

சில தனியார் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின்  சந்தை பங்களிப்பும் உயர்ந்துள்ளது. அதாவது பஜாஜ் அலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி இர்கோ, எஸ்பிஐ ஜெனரல், ரிலையன்ஸ் ஜெனரல் நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு உயர்ந்துள்ளது.  

அதேநேரத்தில் கடந்த வருடத்துடன் ஒப்பீடுகையில் ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு 8.88 சதவிகிதத்திலிருந்து 8.84 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் ராயல் சுந்தரம், டாடா ஏஐஜி, ஶ்ரீராம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் சந்தை  பங்களிப்பும் குறைந்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ