Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அத்யாவசிய பொருட்களின் பட்டியலில்... இனி வெங்காயமும், உருளை கிழங்கும்!

மத்திய அரசாங்கம் வெங்காயம் மற்றும் உருளை கிழங்கு ஆகிய இரண்டையும் அத்யாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. வெங்காயம் மற்றும் உருளை கிழங்கின் விலையானது சமீப காலமாகவே அதிகரித்து வந்தது. கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் வெங்காயத்தின் விலை 40% அதிகரித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் வெங்காயம் மற்றும் உருளைகிழங்குகளை வியாபாரிகள் அதிகம் இருப்பு வைத்ததுதான்.


இது குறித்து சட்டத்துறை மற்றும் தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘‘ வெங்காயம் மற்றும் உருளை கிழங்கை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்த்துள்ள மத்திய அரசு அவற்றை இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த கட்டுப்பாடு ஒரு ஆண்டு காலம் நடைமுறையில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது மத்திய அரசு. வெங்காயம், உருளைகிழங்கு அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பதுக்கல்காரர்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்  வெங்காயம் மற்றும் உருளை கிழங்கினை வணிகர்கள் எவ்வாறு இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசு நிர்ணயிக்க வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார்.


 

இதனிடையே வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை டன்னுக்கு 500 டாலர் ரூபாயாக (சுமார் 30,000 ரூபாய்) மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி ஏற்றுமதி செய்யும் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 30 ரூபாய்க்கு குறைவாக இருக்கக் கூடாது. இந்த விலை நிர்ணயம் இதற்கு முன்பாக ஒரு டன்னுக்கு 300 டாலர் (சுமார் 18,000 ரூபாய்) என்கிற அடிப்படையில் இருந்தது. இந்த விலை நிர்ணயம் வெங்காயத்தின் விலையை குறைக்காததை தொடர்ந்து மீண்டும் விலை நிர்ணயத்தை அதிகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. அதே போல உருளை கிழங்கின் மீதான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை ஒரு டன்னுக்கு 450 டாலராக (சுமார் 27,000 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close