Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் வாயிலாக ரூ.500 கோடி திரட்டுகிறது: ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்

ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம், ஒவ்வொன்றும் ரூ.1,000 முக மதிப்பில் 50 லட்சம் ஈடுபெற்ற, திரும்பபெறக்கூடிய பங்குகளாக மாறாத கடன் பத்திரங்கள் வெளியீடு வாயிலாக ரூ.500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. கடன் பத்திரங்கள் வேண்டி அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் நிலையில் ரூ.3,000 கோடி வரை திரட்டிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கடன் பத்திர வெளியீடு ஜூலை மாதம் 2-ந் தேதி தொடங்கி ஜூலை 22-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிறுவனம் வெளியிடும் 50 லட்சம் கடன்பத்திரங்கள் முழுவதற்கும் முன்கூட்டியே விண்ணப்பங்கள் வரும் நிலையில், இந்த வெளியீட்டை முன் கூட்டியே முடித்து கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இறுதி தேதியை நீட்டிக்கவும் நிறுவனத்திற்கு உரிமை உண்டு.


இந்த கடன் பத்திரங்களுக்கு கிரிசில் நிறுவனம் ‘கிரிசில் ஏஏ/ஸ்டேபிள்’ மற்றும் கேர் நிறுவனம் ‘கேர்ஏஏபிளஸ்’ மற்றும் ரூ.3,000 கோடி வரையிலான தொகைக்கு இந்தியா ரேட்டிங்‌ஸ்  ‘இண்ட்ஏஏபிளஸ்’ ஆகியவை தர நிர்ணய அந்தஸ்துகளை வழங்கி உள்ளன.

இந்த கடன்பத்திரங்கள் எட்டு வித்தியாசமான தொடர்களில்(சீரிஸ்) வழங்கப்படுகிறது:

அதாவது 36 மாதங்கள், 60 மாதங்கள் மற்றும்84 மாதங்கள் முதிர்வுகாலத்தைக் கொண்ட தொடர்1, தொடர் 2, தொடர் 3 ஆகிய பிரிவுகளுக்குதனிநபர்களுக்கு முறையே11 சதவீதம், 11.25 சதவீதம் மற்றும்11.50 சதவீதம் வட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும். தொடர் 4 மற்றும் 5 பிரிவுகளுக்கு மாதந்தோறும் வட்டி வழங்கப்படும். பங்குகளாக மாறாத கடன் பத்திரங்களை டீமேட் வடிவில் பெறும் தனிநபர்கள் மட்டுமே  இந்ததொடர்களுக்குவிண்ணப்பிக்கலாம். தொடர் 4 (5 ஆண்டுகள்)-க்கான வட்டிவிகிதம்10.71 சதவீதமாகவும், தொடர் 5(7 ஆண்டுகள்)-க்கான வட்டிவிகிதம்10.94 சதவீதமாகவும் (ஆண்டு வட்டிவிகிதம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்கள் 6, 7 மற்றும் 8 ஆகிய பிரிவுகளில், முக மதிப்புதொகைமற்றும்வட்டி, முதிர்வு  காலம் முடிந்த பிறகு வழங்கப்படும்.  தொடர் 6 (3 ஆண்டுகள்)-க்கான வட்டிவிகிதம் 11 சதவீதமாகவும், தொடர் 7 (5 ஆண்டுகள்)-க்கான வட்டிவிகிதம் 11.25 சதவீதமாகவும்,  தொடர் 6 (7 ஆண்டுகள்)-க்கான வட்டிவிகிதம்11.50 சதவீதமாகவும் (ஆண்டு வட்டிவிகிதம்) இருக்கும்.

‘ஹை நெட்வொர்க்’எனப்படும் அதிக நிகர சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்கள் மற்றும் சில்லறைமுதலீட்டாளர்கள், தனி நபர்களாக கருதப்படுவர். இந்த கடன்பத்திரங்கள் தேசியபங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும்.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ