Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பை டப்பா வாலாக்கள் டெலிவரி சார்ஜ் அதிகரிப்பு

மும்பையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான டப்பாவலாக்கள் தங்களது டெலிவரி கட்டணத்தை 
ரூ 100 உயர்த்தியுள்ளனர். விலைவாசி உயர்வு காரணமாக தவிர்க்க முடியாமல் இந்த கட்டண உயர்வை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
 
மழை, வெயில், போக்குவரத்து நிறுத்தம் என எந்த இடர்கள் வந்தாலும் அதைக் காரணம் காட்டி தங்களது வேலையை டப்பாவாலக்கள் நிறுத்தியது இல்லை. சிஸ்க் சிக்மா ரேட்டிங் நிறுவனம் இவர்களுக்கு வேலையை  பாரட்டி 99.9999 சதவிகிதம் பணியில் துல்லியமாக இருக்கிறார்கள் என சான்றிதழும் வழங்கியுள்ளது. அதாவது ஆறு மில்லியன் உணவு டப்பாக்கள் டெலிவரி செய்கிறார்கள் என்றால் அதில் ஒரே டெலிவரி மட்டுந்தான் இடம் மாறிப்போகிறதாம். அப்படி ஒரு துல்லியமான டெலிவரி முறையை கடைபிடிக்கிறார்கள் டப்பா வாலாக்கள். 
 
 
வீடுகளிலிருந்து உணவை வாங்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் சம்பந்தபட்டவர்களின் அலுவலகத்துக்கு சேர்ப்பதுதான் இவர்களது பணி. தூரம் மற்றும் நேரத்திற்கு ஏற்ப மாதத்திற்கு ரூ 600 முதல் ரூ 1000 வரை டெலிவரி  கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த பணியில் சுமார் 5,000 நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் எனவும் இவர்களுக்கான  மாதச்சம்பளமாக ரூ 8000 வரை வழங்கப்படுகிறது எனவும் மும்பை டப்பா வாலா கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  
 
அதிகரித்துவரும் விலைவாசி மற்றும் போக்குவரத்து கட்டணங்கள், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு என பல காரணங்களால் இந்த விலையேற்றம் அறிவிக்கப்படுகிறது என இவர்கள் தெரிவித்துள்ளனர். மும்பை டப்பாவாலாக்கள் குறித்து பல மேலாண்மை நிறுவனங்கள் ஆராய்ச்சியே செய்துள்ளன என்பதும் முக்கியமானது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ