Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடமானக் கடனுக்கு சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பிசினஸ் மற்றும் தனிப்பட்ட தேவைகள் அனைத்திற்கும் வீட்டு அடமான வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த கடன் வாங்குபவர்கள் சில ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும். இந்த ஆவணங்கள் சரியாக இருந்தால்தான் கடன் கிடைக்கும். இல்லையெனில் அலைச்சல் தான். என்னென்ன ஆவணங்களை அடமானக் கடனுக்கு சமர்பிக்க வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
 

மாத சம்பளம் வாங்குபவர்கள்:
 
1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.
2. புகைப்படம்
3. அடையாள மற்றும் முகவரி சான்று
4. சமீபத்திய சம்பள விவர ரசீது
5. படிவம் 16
6. கடந்த ஆறுமாத வங்கி கணக்கு விவரம்
7.செயல்பாட்டு கட்டணத்திற்கான காசோலை
 
சொத்தமாக பிசினஸ் செய்பவர்கள்:
 
1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் புகைப்படம்,
2. அடையாள மற்றும் புகைப்பட சான்று
3. கல்வி தகுதி மற்றும் பிசினஸ் விரிவக்கத்துக்கான சான்று
4. கடந்த மூன்று வருடத்துக்கான வருமான வரி தாக்கல் செய்த சான்று
5. கடந்த மூன்று வருடத்துக்கான லாப நஷ்ட கணக்கு விவரம் மற்றும் பேலன்ஸ் ஷிட்
6. கடந்த ஆறு மாத வங்கி கணக்கு விவரம்.
7. கடன் செயல்பட்டு கட்டணத்திற்கான காசோலை. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP