Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

17 மாதங்களில் இல்லாத அளவிற்கு சேவை துறை வளர்ச்சி

இந்தியாவில் உள்ள தனியார் துறைகளின் வளர்ச்சி கடந்த ஜூன் மாதத்தில் அதிகமாக இருந்துள்ளது. உற்பத்தி மற்றும் சேவை துறைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு வணிக நடவடிக்கை குறியீட்டு  அதிகபட்சமாக 54.4 ஆக அதிகரித்துள்ளது. இது மே மாதங்களில் இது சராசரியாக 50 ஆக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு காரணம் புதிய அரசும் மோடி அலையும் தான் என கூறப்படுகிறது.
 
மேலும் ஹச்.எஸ்.பி.சியின் ஆசிய பொருளாதார ஆராய்ச்சி பிரிவின் தலைவர் '' மோடி அலையால் தான் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு கடந்த 17 மாதங்களில் உற்பத்தி மற்று சேவை துறைகள் இந்த வளர்ச்சியை கண்டுள்ளது என்றார். மேலும் எதிர்பார்த்தபடி புதிய அரசு அமைந்துள்ளதாலும், பட்ஜெட் அறிவிப்புகளாலும் இந்திய பொருளாதாரம் இன்னும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
வரும் ஆண்டுகளில் புதிய தொழில் வாய்ப்புகளும், நல்ல பொருளாதார வளர்ச்சியும் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close