Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சகஜமாகிவிட்ட சைபர் குற்றங்கள்... முதலிடத்தில் மஹாரஷ்டிரா!

இந்திய நாட்டில் நடக்கும் அனைத்து விதமான குற்றங்களை பதிவு செய்யும் அதிகாரபூர்வ அமைப்பான தேதிய குற்றப் பதிவுகள் கழகம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையில் 2013-ல் அதிக சைபர் குற்றங்கள் நடந்த மாநிலங்களை வரிசை படுத்தி இருக்கிறது. இதில் மஹாராஷ்டிரா (681 குற்றங்கள் - இது 2012-ம் ஆண்டை விட 44.6% அதிகம்), ஆந்திரா (635 குற்றங்கள் - 2012-ம் ஆண்டை விட 48% அதிகம்), கர்நாடகா (513 குற்றங்கள் - இது 2012-ம் ஆண்டை விட 24.5% அதிகம்) ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்திருக்கின்றன. இந்த மூன்று மாநிலங்களும்தான் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை வருவாயில் 70% வருமானத்தை ஈட்டிக் கொடுக்கிறது.

இதற்கு அடுத்த இடமான நான்காம் இடத்தில் உத்திர பிரதேசமும், ஐந்தாவது இடத்தில் கேரளாவும் இருக்கிறது. இவ்விரு மாநிலங்களின் சைபர் குற்றங்கள் முறையே 372 மற்றும் 349 குற்றங்கள் ஆகும். உத்திரபிரதேசத்தில் மட்டும் கடந்த ஓராண்டுகளில் 81.5% சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு மற்றும் பீகார் மாநிலங்களில் குறைவான சைபர் குற்றங்களே பதிவாகி உள்ளன. தமிழ்நட்டில் 54 சைபர் குற்றங்களும், பீகாரில் 23 சைபர் குற்றங்களும் பதிவாகியுள்ளன.  இதே போல குஜராதத்தில் 61 குற்றங்களும், ஒடிஷாவில் 63 குற்றங்களும் பதிவாகி இருக்கிறது. சமீபத்தில் மிகக் கொடூரமான வன் கொடுமைகள் நடந்த டெல்லியில் 131 குற்றங்கள் பதிவாகி இருக்கின்றன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட  72.4% அதிகம் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

2013-ம் ஆண்டில் இந்தியாவில் பதிவாகியுள்ள மொத்த சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 4,356. இது 2012-ம் ஆண்டை விட 51.5% அதிகம் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தின் தலைமையிடமாக விழங்கும் பெங்களூருவில் 399 சைபர் குற்றங்கள் பதிவாகி இருப்பதும் இவ்வறிக்கையில் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ