Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் எதிரொலி! சென்செக்ஸ் 26,000! நிஃப்டி 7700! ஏற்றத்தில் சந்தைகள்!!

இன்று காலை(07.07.2014) துவங்கியதுமே சந்தைகள் ஏற்றத்தில் துவங்கியுள்ளன. புதிய இலக்காக மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 26,000 புள்ளிகளையும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 7700 புள்ளிகளையும் கடந்தது. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 26,076 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 7780 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

நாளை ரயில்வே பட்ஜெடும், வரும் 10 தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பட்ஜெட் எதிர்பார்ப்பு காரணமாக இன்று சந்தைகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.


அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.84 ரூபாயாக உள்ளது. குறிப்பாக ஐடிஎஃப்சி நிறுவன பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்தும், டாடா பவர் நிறுவன பங்குகள் மூன்று சதவிகிதம் அதிகரித்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ