Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கு இலவச ஓ நிலை ஹார்ட்வேர் கணினி பயிற்சி

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம் ஒரு வருட இலவச கணினி பயிற்சி அறிவித்துள்ளது. இந்த ஒரு ஆண்டு ஓ நிலை கணினி வன்பொருள் (ஹார்ட்வேர்) பயிற்சி ஆகஸ்டு 1 ம் தேதி ஆரம்பிக்கப்படுகிறது.



இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இலவசமாக அளிக்கப்படும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டு மையம், இந்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகத்தின் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டிடம், 3-வது தளம் எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600004 (தொலைபேசி :044-24615112) என்னும் முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங்களை காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 07.07.2014-லிருந்து 24.07.2014 வரை இந்த மையத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 24.07.2014.

கல்வித்தகுதி: வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துள்ள +2 மற்றும் அதற்கு மேலும் கல்வித்தகுதி பெற்றவர்கள்.

வயது வரம்பு: ஜுன் 30, 2014 அன்று 18-லிருந்து 30-வரை

பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் தேதிகள்: 25.07.2014, 28.07.2014, 30.07.2014 ஆகிய தேதிகளிள் நடைபெறும் என்று பயிற்சி மற்றும் வழிகாட்டு மையத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி/தினப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP