Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ராஷ்ட்ரபதி பவனின் விருந்தினரான ரிக்‌ஷாகாரர்

ஒரு ரிக்‌ஷாகாரர் தான் ராஷ்ட்ரபதி பவனின் விருந்தினர் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் தர்மவீர் கம்போஜ் எனும் 51 வயது ரிக்‌ஷாகாரர் தான் குடியரசு தலைவர் மாளிகையின் தற்போதைய விருந்தினர். 27 வருடங்களுக்கு முன்னால் ஒருவர் டெல்லியில் பழைய ஆங்கிலேய காலத்து கட்டிடங்களை பார்வையிட ரிக்‌ஷாக்களை இயக்கி வந்தவர் ஒருபோதும் அவர் குடியரசு தலைவர் மாளிகையின் விருந்தினர் ஆவார் என எதிபார்த்திருக்க மாட்டார்.
 
 
தற்போது ஒரு உணவு பதப்படுத்தும் இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கும் நேஷனல் இனவேட்டிவ் ஃபவுண்டேஷனால் கெளரவிக்கப்பட்டுள்ளார். இந்த இயந்திரத்தை கண்டுபிடித்ததற்காக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ராஷ்ட்ரபதி பவனில் தங்கியிருக்கும் தர்மவீர் கம்போஜ் ''நான் 27 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு தங்கியிருந்தபோது இங்கு நிறைய காய்கறிகள் விளைவிக்கப்படுவதையும் அதனை சரியான முறையில் பதப்படுத்தவும், பேக்கிங் செய்யவும் முடியாமல் தவித்தனர் அப்போது தோன்றிய யோசனையில் தான் குறைந்த நேரத்தில் அதிக காய்கறிகளை பதப்படுத்தும் இயந்திரத்தை கண்டுபிடித்தேன் என்றார்.
 
இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 200கிலோ தக்காளியின் சாறுகளை பிழிந்தெடுக்கவும், 100 கிலோ கற்றாழையிலிருந்து பசை தயாரிக்கவும் இந்த இயந்திரம் உதவும் என்று கூறுகிறார்.கென்யா போன்ற நாடுகளிலிருந்து 20க்கும் மேற்பட்ட ஆர்டர்களை கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய இவர் வரும் 20ம் தேதி வரை குடியரசு தலைவர் மாளிகையில் விருந்தினராக இருப்பார் என கூறப்பட்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ