Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் குழாய் பதிக்க கெயில் நிறுவனத்துக்கு தடை நீட்டிப்பு!

தமிழகத்தில் விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் கெயில் நிறுவனத்தின் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி திரவ எரிவாயு முனையத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை, தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் விவசாய நிலங்களின் வழியே 310 கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொள்ள கெயில் நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளையும் துவங்கியது.

இதனால், வேளாண் நிலங்கள் பாதிக்கும் என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close