Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட் 2014

ரயில்வே பட்ஜெட் 2014
 
*  பட்ஜெட் அறிவிப்புகளை துவங்கினார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா!!
 
 *  12 மணிக்கு ரயில்வே பட்ஜெட்டை அறிவிக்க ஆரம்பித்தார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா!!
 
 *  ரயில்வே பட்ஜெட்டில் 2014 -15 ஆம் ஆண்டில் 1.101 பில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
*  2014-  15 நிதியாண்டில் ரயில்வே துறையில் 64,305 கோடி முதலீடு 
 
* ஏ -1  அந்தஸ்து உள்ள ரயில் நிலையங்களில்  வைஃபை வசதி செய்யப்படும்.
 
* மெட்ரோ நகரங்களில் அதிவேக ரயில்கள் 
 
* அஞ்சல் அலுவகம் மற்றும் செல்போன் மூலமாக ரயில் டிக்கெட் புக் செய்ய வசதிகள் செய்யப்படும்
கம்பியூட்டர் மூலமாக பார்சல் புக்கிங் செய்ய ஏற்படு. இது இ கமர்ஸ் பிசினஸ் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். 
 
 * அடுத்த ஐந்து ஆண்டுகளில் பேப்பர் லெஸ் அலுவலகங்களாக ரயில்வே துறை மாறும். 
 
 
* மும்பை, அகாமதாபாத் நகரங்களில் புல்லட் ரயில் திட்டங்கள் உருவாக்கப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இது 160 - 200 கி,மீட்டர் வேகத்தில் செல்லும். 
 
 
* இ - டிக்கெட் புக்கிங் செய்யும் முறையை மேம்படுத்தப்படும். ஆட்டோமேடிக் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வகையில் வசதிகள் உருவாக்கப்படும். 
 
* சுற்றுலா மேம்படுத்தும் வகையில் முக்கியமான இடங்களுக்கும், மத கோயில்கள் சார்ந்த இடங்களுக்கு தனி பேக்கேஜ் ரயில்கள். 
 
* புறநகர் ரயில்களில் ஆட்டோமேட்டிங் டேர்கள் அமைக்கப்படும். இது பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும். 
 
* அனைத்து ரயில்வே நிலையங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் ஆர்.ஒ அமைக்கப்படும். 
 
* சிறிய அளவிலான திட்டங்கள் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
 
* அனைத்து ரயில் நிலையங்களும் புதுப்பிக்க மற்றும் தரம் உயர்த்தப்படும்
 
* அனைத்து நடைமேடைகளுக்கு இடையே பேட்டரி கார்கள் இயக்கப்படும்.
 
* 2014-15ல் 4.9 கோடி வருமானம் உயரும்.
  
* எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்து கட்டணம் மாறுபடும்.
 
* தரமான உணவுகளை உடனாடியாக சமைத்து தரும் வகையில் ஐவிஆர் எஸ் திட்டம் உருவாக்கப்படும். முக்கியமான ரயில்வே நிலையில் புட்கோர்ட் உருவாக்கப்படும். 
   
* உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடு மூலம் நிதி திரட்டப்படும்.
 
* தற்போது ஏற்பட்டுள்ள கட்டண உயர்வால் 8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே துறை அறிவிப்பு.
  
* உலகின் மிகப்பெரிய சரக்கு எடுத்து செல்லும் துறையாக இந்திய ரயில்வே துறை மாற்றப்படும்.
 
* தற்போதைய திட்டங்களை 10 ஆண்டுகளில் செயல்படுத்த 5 லட்சம் கோடி தேவை. ரயில்வே துறை வருவாயில் ஒரு ரூபாயில் 94 காசுகள் செலவிடப்படுகின்றன.
 
* இந்தியாவில் இன்னும் பல இடஙகள் ரயில்வேயால் தொடர்பு கொள்ளப்டவில்லை. அந்த பகுதிகளை எட்ட முடிவு.
 

 

 
 
 
 
 
 
* ரயில்வே பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு  எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளது. இதனால் மத்தியம் 2.10 மணி வரை மக்களவை ஒத்தி வைப்பு.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP