Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே பட்ஜெட் 2014: முக்கிய அம்சங்கள்!

ரயில்வே பட்ஜெட் 2014:

சென்னை - விசாகப்பட்டினம் வாரந்திர ரயில் அறிமுகம்.

  ரயில்வே பட்ஜெட்டில் பெரிய அளவில் எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லாதால் ரயில் துறைச் சார்ந்த பங்குகளின் விலை 4 சதவிகிதத்திற்கு மேல் குறைந்துள்ளது.  

புதிதாக பட்ஜெட் அறிவிப்புகளில் கட்டண உயர்வு இல்லை!

பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள்!

27 விரைவு ரயில்கள்

8 பயணிகள் ரயில்கள்

7 புறநகர் ரயில்கள்

5 பிரீமியம் ரயில்கள்

6 ஏசி ரயில்கள் 

5 ஜனசாதரன் ரயில்கள்

சாலிமர் - சென்னை, ஜெய்ப்பூர் மதுரை புதிய அதிவேக ரயில்கள் 

ரயில்வே பல்கலைகழகம் அறிமுகப்படுத்தப்படும்

 
ரயில் நிலைய கூறைகளில் சோலார் வசதி ஏற்படுத்தப்பட்டு மின்சார வசதி பெறப்படும்
 
சென்னைக்கு 9 அதிகேக ரயில்கள்
 
பார்சல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு
 
ரயிலின் வருகை புறப்பாடு எஸ்.எம்.எஸ் மூலம் அறிவிக்கப்படும்.
 
பொறியியல், மேலாண்மை மாணவர்களுக்கு ரயில்வேயில் இன்டர்ன்ஷிப் வசதி 
 
விரைவில் இந்தியாவில் முதல் முறையாக புல்லட் ரயில்கள் திட்டம் அறிமுகப்படுததப்படும்!
 

 
ஏ -1  பிரிவு பெட்டிகளில் ஒய் பைய் வசதி செய்யப்படும்.
 
மெட்ரோ நகரங்களில் அதிவேக ரயில்கள் 
 
அஞ்சல் அலுவகம் மற்றும் செல்போன் மூலமாக ரயில் டிக்கெட் புக் செய்ய வசதிகள் செய்யப்படும்
கம்ப்யூட்டர் மூலமாக பார்சல் புக்கிங் செய்ய ஏற்பாடு. இது இ காமர்ஸ் பிசினஸ் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். 
 
 அடுத்த ஐந்து ஆண்டுகளில் பேப்பர் லெஸ் அலுவலகங்களாக ரயில்வே துறை மாறும். 
 
மும்பை, அகமதாபாத் நகரங்களில் புல்லட் ரயில் திட்டங்கள் உருவாக்கப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இது 160 - 200 கி,மிட்டர் வேகத்தில் செல்லும். 
 
இ - டிக்கெட் புக்கிங் செய்யும் முறை மேம்படுத்தப்படும். ஆட்டோமேட்டிக் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வகையில் வசதிகள் உருவாக்கப்படும். 
 
சுற்றுலா மேம்படுத்தும் வகையில் முக்கியமான இடங்களுக்கும்,  கோயில்கள் சார்ந்த இடங்களுக்கு தனி பேக்கேஜ் ரயில்கள். 
 
புறநகர் ரயில்களில் ஆட்டோமேட்டிங் டோர்கள் அமைக்கப்படும். இது பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும். 
 
அனைத்து ரயில்வே நிலையங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கும் வகையில் ஆர்.ஒ வசதி அமைக்கப்படும். 
 
சிறிய அளவிலான திட்டங்கள் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
 
அனைத்து ரயில் நிலையங்களும் புதுப்பிக்கப்படும் மற்றும் தரம் உயர்த்தப்படும்
 
நடைமேடைகளுக்கு இடையே பேட்டரி கார்கள் இயக்கப்படும்.
 
2014-15ல் ரூ. 4.9 கோடி வருமானம் உயரும்
 
30 ஆண்டுகளுக்கு முன் அனுமதிக்கப்பட்ட 4 திட்டங்கள் இன்னும் கிடப்பில் உள்ளன.
 
எரிபொருள் விலையேற்றத்தை பொறுத்து கட்டணம் மாறுபடும்.
 
தரமான உணவுகளை உடனடியாக சமைத்து தரும் வகையில் ஐவிஆர்எஸ் திட்டம் உருவாக்கப்படும். முக்கியமான ரயில்வே நிலையில் ஃபுட்கோர்ட் உருவாக்கப்படும். 
 
2.3 கோடி பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
 
பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் ரயில்வே வருவாயை உயர்த்த நடவடிக்கை
 
உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீடு மூலம் நிதி திரட்டப்படும்
 
தற்போது ஏற்பட்டுள்ள கட்டண உயர்வால்  8 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும்
  
உலகின் மிகப்பெரிய சரக்கு எடுத்து செல்லும் துறையாக ரயில்வே மாற்றப்படும்.
 
தற்போதைய திட்டங்களை 10 ஆண்டுகளில் செயல்படுத்த ரூ. 5 லட்சம் கோடி தேவை
 
ஒரு ரூபாய்க்கு 94 காசுகள் செலவிடப்படுகின்றன..
 
* இந்தியாவில் இன்னும் பல இடஙகளுக்கு ரயில் வசதி இல்லை. அனைத்து இடங்களுக்கும் ரயில் விட இலக்கு.!
 
 *  ரயில்வே பட்ஜெட்டில் 2014 - 15 ஆம் ஆண்டில் 1.101 பில்லியன் டன் சரக்குகளை கையாள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
*  2014 - 15 நிதியாண்டில் ரயில்வே துறையில் 64,305 கோடி முதலீடு 
 
 
 
 
 
*  சர்வதேச தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள், பாதுகாப்பு விஷயங்களுக்கும், அதிவேக ரயில்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்
 
 *  ஃபேஸ்புக், ட்விட்டரில் ரயில்வே 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ