Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய ஃபண்டை அறிமுகம் செய்தது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட்!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனம், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் குரோத் ஃபண்டு சீரிஸ் 2 என்கிற புதிய ஃபண்டை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதியை மிட் அண்டு ஸ்மால்கேப் பங்குகளிலும், அரசு பத்திரங்களிலும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது இந்த நிறுவனம்.



இந்த மியூச்சுவல் ஃபண்டினுடைய பெஞ்ச்மார்க் நிஃப்டி இண்டெக்ஸ். குளோஸ்டு எண்டடு திட்டத்தை சேர்ந்த இந்த ஃபண்டின் முதிர்வு காலம் 1,286 நாட்கள். இதன் ஆரம்ப தேதி ஜூலை 14, 2014. முடிவு தேதி ஜூலை 28, 2014. குறைந்தபட்ச முதலீடு 5,000 ரூபாய்.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ