Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் இந்தியா வருகிறது கிழக்கிந்திய கம்பெனி!

இந்தியாவில் முதன் முதலில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேய ஆட்சி முடிவுக்கு வந்தபின் தன் வர்த்தகத்தை விட்டு இந்தியாவிலிருந்து முழுவதுமாக வெளியேறியது. தற்போது ஐரோப்பியாவில் மிக ஆடம்பரமான ரியல் எஸ்டேட் பிரிவிலும் மற்றும் உணவு பொருள் பிரிவிலும் கால்பதித்துள்ள இந்த நிறுவனம். இப்போது இந்தியாவில் மீண்டும் தொழில் வாய்ப்புகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
 
இதற்காக மஹிந்த்ரா நிறுவனத்துடன் இணைய இருப்பதாகவும் உணவு மற்றும் விலை உயர்ந்த ரியல் எஸ்டேட் பிரிவுகளில் வர்த்தகம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி மஹிந்திரா நிறுவனம் கிழக்கிந்திய கம்பெனியின் 10 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூல விலை உயர்ந்த காபி, சாக்லேட் பொருட்களை இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி அறிமுகப்படுத்தி விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.
 
2016ம் ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் உள்ள பெரிய மால்களிலும், கடைகளாகவும் 7 முதல் 10 கிளைகளை துவங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வணிகம் செய்ய வந்த அதே நிறுவனம் இப்போது மீண்டும் வர்த்தகத்திற்காக இந்தியாவில் நுழைகிறது.அதற்கான ஏற்பாடுகளை செய்துவரும் கிழக்கிந்திய கம்பெனி 2016ல் இந்தியாவில் வர்த்தகத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ