Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீமேட் கணக்கு: செபி முக்கிய அறிவிப்பு

பங்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்காக டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் நீண்ட நாட்களாக எந்த விதமான பங்கு பரிவார்த்தனையும் செய்யாமல் இருந்தால் அல்லது, டீமேட் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கக் கூடாது என செபி தெரிவித்துள்ளது. 


 

மேலும் அவர்களுக்கு கடைசியாக ஒருமுறை மட்டும் தபால் மூலமாக முதலீட்டு விவரம் அனுப்ப வேண்டும். அதன் பிறகு அந்த முதலீட்டாளரின் இ- மெயில் முகவரியை வாங்கிக் கொண்டு அதற்கு முதலீட்டு அறிக்கைகளை அனுப்ப வேண்டும் எனவும் செபி தெரிவித்துள்ளது.  

பரிவார்த்தனை செய்யாத முதலீட்டாளர்களுக்கு இனிமேல் தபால் மூலமாக முதலீடு விவரங்களை அனுப்ப வேண்டாம் எனவும் செபி தெரிவித்துள்ளது. 

முதலீட்டாளர்கள், கணக்கு வைத்திருக்கும் டிபி யிடம்  தொலைபேசி எண் மற்றும் இ மெயில் முகவரியை இது வரை கொடுக்கவில்லை என்றால் கொடுத்துவிடுங்கள். 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ