Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் 2014

பட்ஜெட் 2014:..
 
25 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகை.  முதல் மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டிலிருந்து 
 
 
தொலைதொடர்பு உபகரணங்களுக்கு 10% இறக்குமதி வரி விதிப்பு.
அச்சு ஊடகங்களுக்கு சேவை வரியிலிருந்து விலக்கு.
 
சோடா பானங்களுக்கான வரி 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 
வைரம், நவரத்திர கற்களின் விலை குறையும். 
 
காலணிகளுக்கான வரி 6 % சதவிகிதமாக குறைப்பு.
 
சிகரெட் மற்றும் குட்கா பொருட்களுக்கு வரி அதிகரிப்பு.அதாவது 11 % சதவிகிதத்திலிருந்து  16சதவிகிதமாக அதிகரிப்பு.
 
கல்வி வரியில் மாற்றமில்லை. 
வரி செலுத்துவோர் நலனுக்காக 60 புதிய சேவை மையங்கள்
 
 
எவர்சில்வர் பொருட்களுக்கான வரி 5 % லிருந்து 7% மாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
சிறிய எல்இடி, எல்சிடி டிவி, சோப் , கம்பியூட்டர் ஆகிய பொருட்களின் விலை குறையும். 
பெட்ரோ கெமிக்கல் பொருட்களுக்காக சுங்க வரி 5 % லிருந்து 2.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
நேரடி வரிவசூலிப்பில் 22200 கோடி ரூபாய் வருமான இழப்பு.
 
உத்ரகாண்டில் தேசிய இமயமலை கல்வி மையம் தொடங்க 100 கோடி
புலம்பெயர் காஷ்மீர் மக்களின் நலன் காக்க 500 கோடி
எல்லையோர கிராமங்களை மேம்படுத்த 990 கோடி 
 
டெல்லியில் குடிநீர் மேம்பாட்டுக்கு 700 கோடி
 
 
 
 
 
 
19 இன்ச் எல்இடி  டிவிகளை இந்தியாவிற்கு கொண்டு வரும் போது அடிப்படை கலால் வரி இருக்காது. 
 
நீண்டக்கால மியூச்சுவல் முதலீடுகளுக்கு 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
நேரடி வரிவிதிப்பு மற்றும் சர்சார்ஜ்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. 
 
கல்வி திட்டங்களுக்காக வசூலிக்கப்படும் வரி 3 சதவிகிதமாக அப்படியே இருக்கும். 
 
மின் உற்பத்தி திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி ஒய்வு அளிக்கப்படும்.
வீட்டுக் கடனுக்கான வட்டி வரி சலுகை 1.5 லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
தனிநபர் வருமான வரம்பு 2. லிருந்து  2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
மூத்த குடிமக்களுக்கு 2.5 லட்சத்திலிருந்து  3 லட்சமாக ரூபாய வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
 
80சி யின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு 1 லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக  வரி சலுகை உயர்த்தப்பட்டுள்ளது.
 
 
 புலம் பெயர்ந்த காஷ்மீர் மக்களின் நலன் காப்பதற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
போர் அருங்காட்சியகம் அமைக்க 100 கோடி ஒதுக்கீடு 
நதிகளை இணைக்க முயற்சி எடுக்கப்படும். 
 
கங்கையை தூய்மைப்படுத்த 2307 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். 
 
 
காவல் நிலையங்களை நவீனப்படுத்த 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 
காஞ்சிபுரம், மதுரா ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று பாரம்பரிய சின்னங்களை பராமரிக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்கு சிறப்பு முதலீட்டு திட்டம். 
 
பாதுகாப்பு துறைக்கு கூடுதலாக 5000 கோடி நிதி ஒதுக்கீடு. மொத்த ஒதுக்கீடு 2.29 லட்சம்கோடி
 
 
புதிதாக 16 துறைமுகங்கள் அமைக்க 11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 
உயர் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களுக்கு 100 கோடி ஒதுக்கீடு
சுரன்ங்க தொழிலை மேம்படுத்த சுரங்க கனிம வளச் சட்டம் திருத்தப்படும். 
வடகிழக்கு மாநிலங்களின் சாலை சீரமைப்புக்கு 3000 கோடி
ஒரு குடும்பத்திற்கு 2 வங்கி கணக்குகள் தொடங்க நடவடிக்கை
 
புதிதாக 6 கடன் வசூல் தீர்பாயங்கள் அமைக்கப்படும்.
 
 
 
பிபிஎஃப் முதலீடு ஒரு லட்சத்திலிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
 
ஒரு குடும்பத்திற்கு 2 வங்கி கணக்கு துவங்க நடவடிக்கை.
 
3000 கி.மீ துரத்திற்கு கேஸ் பைப்லைன் தனியார் மற்றும் அரசு இணைத்து அமைக்கும். 
 
அனைத்து அமைச்சகங்களும் மின்னணு முறையில் ஒருங்கிணைப்படும்.
 
கேய் ஒய்சி  விதிமுறைகள் மேம்படுத்தப்படும். ஒரே டீமேட் கணக்கின் மூலமாக அனைத்து  நிதி முதலீடுகளும் செய்யலாம்.
 
புதிதாக 7 தொழில் நகரங்கள் உருவாக்கப்படும். 
 
சென்னை - பேங்களூரு தொழில்பாதை திட்ட துரிதப்படுத்தபடும். இதில் 20 கிளஸ்டர்களை இணைப்பதாக இருக்கும். 
குறுகிய கால ஊரக மறு சுழற்சி திட்டத்திற்கு 5,000 கோடி 
நடப்பு நிதியாண்டில் 8 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு. 
 
 தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் சோலார் பவர் திட்டங்களுக்கு  500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
 
 புதிதாக 6 டெக்ஸ்டைல் கிளாஸ்டர் அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்  புணரமைக்கப்படும்.
 
நிலம் இல்லாத 5 லட்சம் விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி. 
நகரங்களில் விவசாயிகளே சந்தையை அமைத்துக்கொள்ள முன்னுரிமை. 
விவசாயிகளுக்கு தனி தொலைக்காட்சி 
மாநில அரசின் ஒத்துழைப்போடு தேசிய அளவில் வேளாண் சந்தை அமைக்கப்படும்
 
 

நகர கட்டுமான வளர்ச்சிக்கு 50,000 கோடி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை. 
அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்க 100 கோடி
தெலுங்கானா ,ஹரியானா வில் தோட்டக்கலை பல்கலைக் கழகங்கள் தொடங்கப்படும். ஆந்திரா, ராஜஸ்தானில் வேளாண்மை பல்கலைக்கழகம். 
 
எஸ்எம்இ கள்தான் பொருளாதார வளர்ச்சி முக்கியமானவர்கள். 
 
நாட்டின் முக்கிய நகரங்களில் தொழிற் நகரங்கள் உருவாக்கப்படும். 
 
நகர்புற ஏழை மக்களுக்கு 4,000 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற குடிநீர் மேம்பாட்டுக்கு 3,600 கோடி ஒதுக்கீடு
லக்னோ, அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 100 கோடி ஒதுக்கீடு.
 
விவசாயிகள் உடனுக்குடன் தகவல்களை தெரிந்துக் கொள்வதற்காக கிசான் டிவி உருவாக்கப்படும். இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
ஆசிரியர் பயிற்சிகள் மேம்படுத்தப்படும். 
 
நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளை ஒருகிணைக்க புதிய திட்டம்.
அசாம், ஜார்க்காண்டில் புதிய விவசாய ஆய்வு மையங்கள் அமைக்கப்படும்.
 
மென்பொருள் தொடர்பான தொழில் துவங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.  
 
 
இதுவரை இல்லாத நடைமுறையாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  பட்ஜெட் தாக்கலின் போது 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டார்.
 
ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு 33,000 கோடி ஒதுக்கீடு
 
 புதிதாக 5 ஐஐடி 5 ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும். 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
பிரான்ட்பேன்ட் மூலமாக கிராம புறங்கள் இணைக்கப்படும். 
 
சமுதாய வானொலி உருவாக்க 100 கோடி ஒதுக்கீடு.
 
கல்விக் கடன் விதிமுறைகள் எளிமையாக்கப்படும். 
 
சென்னையில் எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும். அதே போல மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் பல் மற்றும் காச நோய் மையங்கள் உருவாக்கப்படும்.
 
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 4% வட்டியில் கடன் வழங்கும் திட்டம் மேலும் 100 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
 
 
தேசிய வீட்டு வசதி திட்டத்துக்கு 8,000 கோடி ஒதுக்கீடு 
 
 
 
12 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவங்கப்படும்

 
ஆரம்ப நிலைப் பள்ளிகள் மேம்படுத்தப்படுத்தப்படும். 
 
பெண்குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தரமான குடிநீர், சுகதாரத்திற்காக  அதிகமுக்கியத்துவம் வழங்கப்படும்.
 
வேலை வாய்ப்புகளை உருவாக்க 14, 389 ஒதுக்கீடு.
 
மூத்த குடிமக்கள், கோரப்படாத பி.எஃப். தபால்,வங்கி கணக்குகளை முறைப்படுத்த தனி குழு அமைக்கப்படும். 
 
சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மருத்துவ கல்லூரிகள் மேம்படுத்தப்படும். 
 
 
பொது போக்குவரத்தில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 
2019ம் ஆண்டுக்கு சுகாதரம் மேம்படுத்தப்படும்.
 
பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 
ரூபாய் நோட்டுகளில் பிரெய்லி எழுத்து முறை அறிமுகப்படுத்தப்படும்.
 
வங்கி அல்லாத சேமிப்பாக கிஸான் விகாஸ் பத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்/.
 
கிராமப்புற மின்சாரத்திட்டத்திற்கு 500 கோடி ஒதுக்கீடு.
 
பாசன வசதிக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 
மின்னணு விசா  வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப் படும்.
 
வங்கிகளுக்கு 2018 ஆண்டுக்குள் 2.4  லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி வழங்கப்படும். தன்னாட்சி வழங்கப்படும்,
 
வங்கி துறையை ஊக்குவிக்க கூடுதல் நடவடிக்கை.
 
தாமதமாக முடிவெடுக்கப்படுவதால் பல வாய்ப்புகளை இழந்து வருகிறோம்- அருண் ஜேட்லி பட்ஜெட் உரை.  
4.1% நிதி பற்றாக்குறையை கடந்த அரசு விட்டுச் சென்றுள்ளது. அரசின் வருவாயை அதிகரிக்க மாற்று வழி. நிதி ஆதாரங்களை அதிகரிக்க திட்டம். 
 
 
 வரி வசூலிப்பு முறைகள் மேம்படுத்தப்படும்.; 
 
குறிப்பிட்ட சில துறைகளில் அன்னிய முதலீடு ஊக்குவிக்கப்படும்.
 
இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய முதலீடு 26 சதவிகிதத்திலிருந்து 49 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியுள்ளது., அதுவும் தொழில் துறை அதிக அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
 
அரசின் செலவினங்களை கவனிக்க தனிக்குழு நியமிக்கப்படும். 
 
வறுமை ஒழிப்பு திட்டங்கள் வலிமையாக்கப்படும்.;
 
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 1.7 சதவிகிதமாக உள்ளது. 
 
கருப்பு பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக உள்
ளது. அருண் ஜெட்லி.
 
அடுத்த மூன்று ஆண்டுகளில் வளர்ச்சி 8 சதவிகிதமாக உயர்த்த இலக்கு.
பொருளாதாரம் மிகவும் சாவலான நிலையில் உள்ளது : அருண் ஜெட்லி.
 
11 மணிக்கு பட்ஜெட் உறையை துவங்குகிறார் அருண் ஜெட்லி
 
வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகை உயரலாம்!
 
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்த வாய்ப்பு உள்ளது.
 
சேவை வரிகளில் வரம்பை மாற்ற வாய்ப்பு!
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ