Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொத்த விலைக் குறியீடு 5.43 சதவிகிதமாக குறைவு!


ஜுன் மாத நிலவரப்படி மொத்த விலைக் குறியீடு (Wholesale price inflation) 5.43 சதவிகிதமாக குறைந்துள்ளது. இது கடந்த நான்கு மாத மொத்த விலைக் குறியீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது குறைவாகும்.  உணவு மற்றும் எரிபொருள் விலைக் குறியீடு குறைந்ததால் மொத்த விலை குறியீடு குறைந்திருக்கிறது.

கடந்த மே மாதத்தில் உணவுக்கான விலைக் குறியீடு 9.50 சதவிகிதமாக இருந்தது. அது குறைந்து ஜூன் மாதத்தில் 8.14 சதவிகிதமாக உள்ளது. அதேபோல எரிபொருள் விலைக் குறியீடு 10.53 சதவிகிதத்தில் இருந்து குறைந்து 9.04 சதவிகிதமாக உள்ளது. அடிப்படை பொருட்களின் விலைக் குறியீடானது 8.58 சதவிகிதத்தில் இருந்து 6.84 சதவிகிதமாக குறைந்துள்ளது. ஆனால் உற்பத்தி பொருட்களின் விலைக் குறியீடு மட்டும் 3.55 சதவிகிதத்தில் இருந்து சற்றே அதிகரித்து 3.61 சதவிகிதமாக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ