Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பட்ஜெட் 2014- பெண்களின் நலன்!


பெண் குழந்தைகளின் நலனிற்கு அரசு முன்னுரிமை- மத்திய நிதி அமைச்சர்
பெண் குழந்தைகளின் நலனை பாதுகாப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்கும்போது தெரிவித்தார்.

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக சிறப்பு சிறு சேமிப்பு கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். சிறு சேமிப்பாளர்கள் பயன் அடையும் வகையில் காப்பீடு வழங்க தேசிய சேமிப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும்.

"கிசான் விகாஸ் பத்திரம்" என்ற வேளாண் கடன் பத்திரம் மறுபடியும் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொது சேம நல நிதி வரம்பினை ஆண்டிற்கு ரூ.1.5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக அறிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ