Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நவீன நகரங்களுக்கு ரூ.7060 கோடி ஒதுக்கீடு!

நடப்பு நிதியாண்டில் நவீன நகரங்களுக்கு ரூ 7060 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில்  2014-15ம் ஆண்டின் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும் போது தெரிவித்தார்.

பிரதமர் தொலைநோக்கு பார்வையை அடிப்படையாகக் கொண்டு நடுத்தர அளவில் உள்ள நகரங்களை நவீனபடுத்துதல், பெரும்பாலான நகரங்களை செயற்கைகோள் நகரங்களாக மேம்படுத்துவதின் மூலம் 100 நவீன நகரங்களை உருவாக்கபடும். வளர்ச்சியும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

ஊரக பகுதியிலிருந்து நகரங்களை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை தாக்குபிடிக்க புதிய நகரங்களை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கெனவே இருக்கும் நகரங்கள் வாழ முடியாத நகரங்களாக மாற வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP