Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மகளிர் பாதுகாப்பு- மகளிர் கல்வி திட்டம் அறிமுகம் !


மகளிர் பாதுகாப்பு- மகளிர் கல்வி என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மகளிர் நலனுக்கான சேவைகளை சிறப்புடன் செய்ய இத்திட்டம் உறுதி செய்யும். இதற்கு துவக்க மூலதனமாக ரூ.100 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் மீது மக்களுக்கு உள்ள அக்கறையை அதிகரிக்கவும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தவும் சிறப்பு பிரசாரங்களை அரசு மேற்கொள்ளும் என்று அமைச்சர் கூறினார்.

இந்த விழிப்பு உணர்வு சிறு வயதிலேயே விதைக்கப்பட வேண்டும். பள்ளி பாடத்திலேயே இதற்கான பாடங்கள் இடம்பெற வேண்டும் என்றார்.

மகளிர் பாதுகாப்பு குறித்து பேசுகையில், அரசு சாலை போக்குவரத்தில் பெண் பாதுகாப்பிற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக அறிவிக்கப்பட்டு, ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சகம் செயல்படுத்தும். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சகம் பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பினை பலப்படுத்த ரூ.150 கோடியை செலவழிக்கும்.

தேசிய தலைநகரம் டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையிலும் நெருக்கடி மேலாண்மை மையம் ஆரம்பிக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.  நிர்பயா நிதிக்கும் நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ