Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கங்கை நதி பாதுகாப்பிற்காக 100 கோடி ஒதுக்கீடு



நதிக்கரையோரங்களை மேம்படுத்தவும் அழகுபடுத்தவும் ரூ.100 கோடி ஒதுக்கீடு. ஆறுகளை இணைப்பது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.


 "போற்றுதலுக்குரிய கங்கை" என்ற ஒருங்கிணைந்த கங்கை மேம்பாடு திட்டம் தொடங்கப்படும் என்று நிதி அமைச்சர்  அருண் ஜெட்லி  அறிவித்தார். மக்களவையில் 2014-15 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை சமர்ப்பித்து பேசிய அவர் இதற்தாக இந்த வரவு செலவு திட்ட அறிக்கையில் ரூ.2037 கோடி ஒதுக்கீடு செய்யபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

கங்கை நதியின் பாதுகாப்பிற்காகவும் மேம்பாட்டிற்காகவும் கணிசமான தொகை செலவிடப்பட்டிருப்பதாகவும் ஆனால் ஒருங்கிணைந்த முயற்சி இல்லாததினால் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கங்கை நதி பாதுகாப்பில் பங்களிப்பு செய்ய வெளிநாடு வாழ் இந்தியர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பயன் படுத்தும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நிதியம் ஒன்று அமைக்கப்படும் என்றும் இது சிறப்பு திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

கேதார்நாத், ஹரித்துர், கான்பூர், வாரனாசி, அலகாபாத், பாட்னா, டெல்லி ஆகிய நகரங்களில் ஆறுகளின் கரைகளை மேம்படுத்தவும் அழகுபடுத்தவும் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஆறுகள் வரலாற்று முக்கியதுவம் பெற்றிருப்பதோடு புனிதமாகவும் போற்றப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள நதிகளை இணைக்கும் திட்டத்தின் முன் முயற்சியும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தீவிர படுத்தும் முயற்சியாக விரிவான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணியை துரிதபடுத்தும் வகையில் ரூ.100 கோடியை நிதி அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.                 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP