Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாநில காவல் படையை நவீனபடுத்த ரூ. 3,000 கோடி

 மத்திய அரசு, மாநில காவல் படையை நவீனப்படுத்த நடப்பு ஆண்டிற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கியுள்ளது. 2013-14 நிதி நிலை மதிப்பீட்டில், இதற்காக ரூ.1,847 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது.

இடதுசாரி பிரிவினைவாதிகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு சிறிய ஆனால், மேம்பாடுக்கு தேவையான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் கூடுதல் உதவி வழங்கப்படும்.

எல்லை ஒரே உள்கட்டுமானங்களை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் ரூ.2,250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லையோர பகுதிகளில் உள்ள கிராமங்களின் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு கூடுதலாக ரூ. 990 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடல்சார் காவல் நிலையம், சிறு கப்பல் தளங்கள் அமைப்பதற்கும், படகுகள் கொள்முதல் செய்வதற்கும் ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP