Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவில் 4 இடங்களில் 4ஜி சேவை: ஏர்செல் அறிவிப்பு

இந்தியாவில் ஏர்செல் நிறுவனம் அதிநவீன தொலைதொடர்பு வசதியான 4ஜி சேவையை இந்தியாவில் முதற்கட்டமாக ஆந்த்ரா, அஸாம், பிகார் மற்றும் ஒரிசா ஆகிய நான்கு நகரங்களில் இந்த சேவையை துவக்கியுள்ளது. இதன் மூலம் ஏர்செல் இந்தியாவில் 4ஜி சேவை துவங்கும் இரண்டாவது நிறுவனம் என்ற பெருமையை பெருகிறது. ஏற்கெனவே பாரதி ஏற்டெல் நிறுவனம் இந்த சேவையை குறிபிட்ட நகரங்களில் 4ஜி சேவையை வழங்கி வருகிறது.
 
 
13 நகரங்களில் 3ஜி சேவையை வழங்கி வரும் ஏர்செல் நெட்வொர்க்கில் கடந்த மாதம் மட்டும் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இந்த ஜூன் மாத இறுதி வரை 73 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஏர்செல்லில் இணைந்துள்ளதால் இந்த சேவை எளிதில் வாடிக்கையாளரை சென்றடையும் என ஏர்செல் அறிவித்துள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ