Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரி செலுத்துவோர் சேவை மையங்கள் அதிகரிப்பு

வருமான வரி விலக்கு வரம்பு உயர்வு

தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இரண்டு லட்ச ரூபாயிலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படும். மத்திய நிதியமைச்சர்  அருண்ஜேட்லி இதனைத் தெரிவித்தார். மக்களவையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அமைச்சர் பேசினார். மூத்த குடிமகன்களுக்கான வருமான வரி விலக்கு வரம்பு 2.5 லட்சத்திலிருந்து ரூபாய் மூன்று லட்சமாக அதிகரிக்கப்படும் என்றும் கூறினார். மூன்று சதவீத கல்வி வரியும், கூடுதல் வரியும் தொடரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முதலீட்டு வரம்பு


 


வருமான வரிச் சட்டம் 80 சி இன் கீழ் முதலீடு செய்வதற்கான வரம்பு ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து ரூபாய் 1.5 லட்சமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர்அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நிதி நிதி அறிக்கையை தாக்கல் செய்த அமைச்சர், சொந்தமாக தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட கடன் தொகைக்கு மட்டும் வட்டி வசூலிக்கப்படும்.


வரி செலுத்துவோர் சேவை மையங்கள் அதிகரிப்பு

வரி செலுத்துவோர் நலனுக்காக நடப்பு நிதியாண்டில் 60 மையங்கள் கூடுதலாக திறக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP