Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சூரிய சக்தி மூலம் மின்திட்டம் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவி


வீட்டு வசதித்துறையில் அன்னிய முதலீடு

வீட்டு வசதித்துறையிலும், உள்கட்டமைப்புத் துறையிலும் பல்வேறு நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வங்கிகளிலிருந்து கடன் பெறும் முறை இதன் மூலம் எளிதாகும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, மக்களவையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசும் போது தெரிவித்தார்.


சூரிய சக்தி மூலம் மின்திட்டம் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவி


தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாபெரும் திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தா£.

பொன்னேரியில் அதிநவீன நகரம்

தமிழ்நாடு, கர்னாடகா, ஆந்திர மாநிலங்களில் அதிநவீன நகரங்கள் ஏற்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பொன்னேரி, கர்னாடகாவில் தும்கூர், ஆந்திராவில் கிருஷ்ணாபட்டிணம் ஆகிய ஊர்களில் அதி நவீன நகரங்கள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் திரு. அருண்ஜேட்லி தெரிவித்தார். மக்களவையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சென்னை - விசாகப்பட்டிணம் - பெங்களூரூ - மும்பை தொழில் நுட்ப வழித்தடங்கள் விரைவில் நிறைவு பெறும் என்றும் அமைச்சர்  ஜெட்லி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மாபெரும் ஜவுளிப் பூங்கா


தமிழ்நாடு, கர்னாடக மாநிலத்தில் மைசூர் உட்பட எட்டு நகரங்களில் மாபெரும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி இதனைத் தெரிவித்தார்.


தூத்துக்குடி துறைமுக வளர்ச்சிக்கு நிதி

நாடு முழுவதும் 16 புதிய துறைமுக திட்டப் பணிகள் நிறைவேற்றப்படும். தூத்துக்குடி துறைமுக திட்டத்திற்காக ரூ.11,635 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தனது முதல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து பேசுகையில் தெரிவித்தார்.

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ