Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ வங்கி 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு விற்பனை

எஸ்பிஐ வங்கி 20 ஆயிரம்  கோடி ரூபாய்  மதிப்புடைய பங்குகளை அடுத்த இரண்டு வருடங்களில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக  மூலதன நிதி தேவை மற்றும் விரிவாக்க  பணிகளை செய்ய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி  பொது பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய போவதாக அறிவித்தார். அதாவது பொதுத் துறை நிறுவனங்களின் 51 சதவிகித பங்குகளை வைத்துக் கொண்டு மீதமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. 

இது குறித்து எஸ்பிஐ வங்கியின் சேர்மன் அருந்ததி பட்டாச்சரியா கூறுகையில், எஸ்பிஐ வங்கியில் 58.5% லிருந்து 53 சதவிகிதமாக அரசு பங்கு மூலதனம் குறைத்துக் கொள்ளும் கோரிக்கை நிறைவேற்றினால் பங்குகளை விற்பனை செய்வது குறித்து யோசிப்போம்" என்றார். இதையடுத்து எஸ்பிஐ வங்கி பங்கின் விலை இன்று(18.07.2014) மட்டும்  1.5%  மேல் விலை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

பொதுத்துறை வங்கிகள் பேசல் III விதிமுறைகளை பின்பற்ற கூடுதலாக 2.4 லட்சம் கோடி ரூபாய் வருகிற 2018ம் ஆண்டுக்குள் தேவைப்படும். ஆனால் அரசு இந்த நிதியாண்டில் 11,200 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ