Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சேச கோவா நிறுவனத்தில் வேதாந்தாவின் பங்களிப்பு உயர்ந்தது!

 சில ஆண்டுகளுக்கு முன்பு சேச கோவா நிறுவனத்தை வாங்கிய லண்டனை சேர்ந்த வேதாந்தா நிறுவனம், தற்போது சேசாவில் தனது முதலீட்டை மேலும் அதிகரித்துள்ளது.

ஏறக்குறைய 6.5 கோடி பங்குகளை வாங்கி, சேச கோவா நிறுவனத்தில் தனது ஷேர் ஹோல்டிங்கை 57 சதவிகிதமாக உயர்த்திக்கொண்டுள்ளது வேதாந்தா நிறுவனம். சுமார் 1,700 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த இரண்டு சதவிகித பங்குகளை வாங்கி இருக்கிறது வேதாந்தா நிறுவனம்.

 

சேச கோவா நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்காமலே கிடப்பில் இருக்கிறது. கூடிய விரைவில் இந்த அனுமதி கிடைக்கும்பட்சத்தில், இந்த நிறுவனத்தின் உற்பத்தி இரண்டு மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ