Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்சிஎக்ஸ் : 15% பங்குகளை வாங்குகிறது கோட்டெக் மஹேந்திரா !

ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனத்திடம் தன்னுடைய 26% பங்கு மூலதனத்தை வைத்திருக்கிறது எம்சிஎக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ஃபைனான்ஷியல் டெக்னாலஜிஸிடம் வைத்திருக்கும் தன்னுடைய பங்கு மூலதனத்தை இரண்டு சதவிகிதமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று செபி ஆணை பிறப்பித்தது.
 
இதை ஏற்கெனவே 4% பங்கு மூலதனத்தை விற்றுவிட்டதது இந்த நிறுவனம். அந்த நான்கு சதவிகிதத்தில் இரண்டு சதவிகிதம் பங்குகளை பொதுமக்களிடமும், மீதி இரண்டு சதவிகிதம் பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுவாலா என்பவரிடமும் விற்றுவிட்டது. 
 
மீதி இருந்த 22% பங்கு மூலதனத்தில் இருந்து 15% பங்கு மூலதனத்தை வாங்கிக் கொள்வதாக கோட்டெக் மஹேந்திரா பேங்க் ஒப்புக் கொண்டுள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ