Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிதி முறைக்கேடு


பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நிதி முறைக்கேடுகள் நடைப்பெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மானியங்கள் பெறும் தகுதி பெறாத கல்லூரிகளுக்கு மானியங்களுக்கான அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உரிய விசாரனை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மனித வள அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த முறைகேடுகளை தடுக்க அமைப்பு முறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுவரை இரண்டு புகார்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்ட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. அதே போல், மானியங்கள் அளிப்பதற்கு முன்பாக குறிப்பிட்ட கல்லூரி மானியம் பெற தகுதி பெற்றதா என்பதை சரிபார்க்க ஒருங்கிணைந்த நிதி பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவள அமைச்சர் திருமதி. ஸ்மிருதி ராணி கூறியுள்ளார்.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து பூர்வ பதில் மூலம் இதனை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close