Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

VAO முதல் IAS வரை! போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்

VAO முதல் IAS வரை!
போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்
டாக்டர் சங்கர சரவணன்
 

 ரூபாய் - 1

ஐஏஎஸ் முதற்கட்ட தேர்வில் CSAT என்று அழைக்கப்படும் பொது அறிவு இரண்டாம்தாள் மிக முக்கியமானது. இந்தத் தாளில்தான் தேர்வர்களின் ஆங்கிலப் புரிதிறன், பல துறை விஷயங்களைப் புரிந்துகொண்டு கேள்விகளுக்குத் தக்கவாறு பதிலளிக்கும் திறன் (Subject Comprehension), முடிவெடுத்தலும், பிரச்னைத் தீர்த்தலும் (Decision Making & Problem Solving) உள்ளிட்ட பல கேள்விகள் வருகின்றன.

இந்தத் தாளில் இரண்டு மணி நேரத்தில் 80 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். அதாவது, 120 நிமிடத்தில் 80 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.

இந்தக் கேள்விகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகளுக்கு, ஒரு கேள்விக்கு இரண்டு நிமிடம் என்ற அடிப்படையிலும், சில கேள்விகளைப் பொறுத்தமட்டில் ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்ற கணக்கிலும் நேரத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி பார்க்கிறபோது இந்தப் பகுதியில் இடம்பெறும் 10 மனக் கணக்குகள் முக்கியமானவை. பார்ப்பதற்கு  மிக  எளிமையானவைபோல் தோன்றும் இந்தக் கணக்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு நிமிடத்தில் விடையளிக்க வேண்டும்.

உங்கள் விடை தவறாகிப்போனால், அதற்கு நெகட்டிவ் மார்க் வந்துவிடும் என்பதையும் கவனத்தில்கொள்வது அவசியம்.

2013-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் கேட்கப்பட்ட இந்த ஒரு நிமிட மனக்கணக்குகள் நான்கை இங்கே தருகிறோம். இந்தக் கேள்விகளுக்கான சரியான விடைகளை நான்கு நிமிடங்களுக்குள் கண்டுபிடித்து vao2ias@vikatan.com  அனுப்பிவையுங்கள்.

தேர்வில் கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே தரப்படுகின்றன. அதைப் பின்பற்றி இங்கேயும் கேள்விகளை ஆங்கிலத்தில் மட்டுமே தருகிறோம். (இந்தக் கேள்விகளுக்கு விடை அனுப்பும் போது நான்கு கேள்விக்கும் விடையளிக்க நீங்கள் எத்தனை நிமிடம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் மறக்காமல் குறிப்பிடுங்கள்.)

1 . A sum of Rs. 700 has to be used to give seven cash prizes to the students of a school for their overall academic  performance. If each prize is Rs. 20 less than its preceding prize, what is the least value of the prize?
(a) Rs.30
(b) Rs.40
(c) Rs.60
(d) Rs.80

2. In a garrison, there was food for 1000 soldiers for one month. After 10 days, 1000 more soldiers joined the garrison. How long would the soldiers be able to carry on with the remaining food?
(a) 25 days
(b) 20 days
(c) 15 days
(d) 10 days

3. A person allows a 10% discount for cash payment from the marked price of a toy and still he makes a 10% gain. What is the cost price of the toy which is marked Rs.770?
(a) Rs.600
(b) Rs.610
(c) Rs.620
(d) Rs.630

4. 14 pumps of equal capacity can fill a tank in 6 days. If the tank has to be filled in 4 days, what is the number of extra pumps required?
(a) 6
(b) 7
(c) 9
(d) 11

இந்தக் கேள்விகளுக்கான விடைகளை அடுத்த இதழில் சொல்கிறேன்.

ரூபாய்-2

கடந்த இதழில் வெளிநாட்டு அந்நிய முதலீடு தொடர்பான மாயாராம் கமிட்டியின் பரிந்துரைகள் பற்றி இந்த இதழில் விளக்குவதாகக் குறிப்பிட்டிருந்தோம். அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.

கடந்த ஜூன் 21-ம் தேதி மத்திய நிதி அமைச்சகம் அர்விந்த் மாயாராம் கமிட்டி அளித்த எஃப்டிஐ மற்றும் எஃப்ஐஐ குறித்த வரையறைகள் கொண்ட அறிக்கையை ஏற்றுக் கொண்டது.

அந்நிய நேரடி முதலீடு என்று அழைக்கப்படும் எஃப்டிஐ குறித்து மாயாராம் கமிட்டி வழங்கியுள்ள முக்கிய ஐந்து வரையறைகள் பின்வருமாறு:-

1) அந்நிய முதலீடு பட்டியலிடப்பட்ட கம்பெனிகளின் 10% அல்லது அதற்குமேல் இருக்குமானால், அது அந்நிய நேரடி முதலீடாகக் கொள்ளப்படும். 

2) ஒரு முதலீட்டாளர் பட்டியலிடப்பட்ட கம்பெனியில் 10 சத விகிதத்துக்கு குறைவாக முதலீடு செய்திருந்தாலும், தனது முதல் கொள்முதல் தேதியிலிருந்து ஒரு வருடத்துக்்குள் தனது முதலீட்டை10 சதவிகிதத்துக்குமேல் அதிகரித்துக் கொண்டால், அந்த முதலீடு அந்நிய நேரடி முதலீடாக கருதப்படும்.

3) ஏற்கெனவே செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடுகள், ஒரிஜினலாகவே அந்நிய நேரடி முதலீடாக செய்யப்பட்டவை என்றால், அவை 10 சதவிகிதத்துக்குக் குறைவாக இருந்தாலும் அந்நிய நேரடி முதலீடுகளாகவே கருதப்படும்.

4) பட்டியலிடப்படாத  கம்பெனிகளில் செய்யப்பட்ட அந்நிய முதலீடுகள் இவ்வித சதவிகித வரம்புகள் ஏதுமின்றி அந்நிய நேரடி முதலீடுகளாக கருதப்படும். 

5) ஒரு கம்பெனியில் ஒரு முதலீட்டாளர் அந்நிய நேரடி முதலீட்டாளராக அல்லது அந்நிய நிறுவன முதலீட்டாளராக இருக்கலாம். ஆனால்,  ஒரே கம்பெனியில் இரண்டுமாக இருக்க முடியாது. 

மேலும், அந்நிய நிறுவன முதலீடு, அந்நிய துணிகர மூலதன முதலீடு (Foreign Venture Capital investment) வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடு ஆகியவை குறித்து 12 பக்கம் கொண்ட அர்விந்த் மாயாராம் அறிக்கையை இணையதளத்தில் பார்க்கலாம்.

2014ம் ஆண்டுக்கான ஐஏஎஸ் முதன்மைத் தேர்வுக்கு எதிர்பார்க்கப்படும் கேள்விகளில் மாயாராம் அறிக்கை ஒரு முக்கியமான கேள்வியாகும்.

 ரூபாய் - 3

ஐஏஎஸ் தேர்வுகளில் வரும் பொருளாதாரக் கேள்விகளில் வரிகள் பற்றிய கேள்விகள் வருடந்தோறும் வருகின்றன. சான்றாக இரண்டு கேள்விகளை இந்த வாரம் பார்க்கலாம்.

1.  Which one of the following is not a feature of ‘Value Added Tax’?

(a) It is a multipoint destination based system of taxation
(b) Its is a tax levied on value addition at each stage of transaction in the production-distribution chain
(c) It is a tax on the final consumption of goods or services and must ultimately be borne by the consumer
(d) Its is basically a subject of the Central Government and the State Governments are only a facilitator for its successful implementation.

Ans: (d) Its is basically a subject of the Central Government and the State Governments are only a facilitator for its successful implementation.

மதிப்புக்கூட்டு வரி குறித்த பின்வரும் கருத்துக்களில் எது சரியானதல்ல?

(a) அது பல்முனை சேருமிடம் அடிப்படையில் அமைந்த வரிமுறை ஆகும்.

(b) உற்பத்தி மற்றும் பகிர்மான சங்கிலியில் பரிவர்த்தனை நடக்கும் ஒவ்வொரு நிலையிலும் கூட்டப்படும் மதிப்பின் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது.

(c) இந்த வரி இறுதி நுகர்வு மற்றும் சேவையின் மீதான வரியாக இருப்பதால் இதன் சுமையை நுகர்வோரே ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

(d) இது அடிப்படையில் மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசுகள் இதை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவுகின்றன.

விடை: (d) இது அடிப்படையில் மத்திய அரசு தொடர்புடையது. மாநில அரசுகள் இதை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவுகின்றன.

மதிப்புக்கூட்டு வரி என்பது உண்மையில் மாநில அரசுகள் விதிக்கும் வரிகளில் ஒன்றாகும். இந்த வரி ஏற்கெனவே, மாநில அரசுகள் விதித்து வந்த விற்பனை வரிக்கு மாற்றான ஒரு வரியாக மத்திய அரசின் ஆலோசனைப் படி மாநில அரசுகளால் அறிமுகப்படுத்தப் பட்டது.

இந்த வரியை அறிமுகப்படுத்துவதில் தொடக்கத்தில் மாநிலங்கள் சற்று தயக்கம் காட்டின. அதற்காக மத்திய அரசு பல்வேறு கூட்டங்களை நடத்தி இந்த வரியை அறிமுகப்படுத்தும்போது மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்கு நஷ்டஈடு தொகை தர சம்மதித்த பின்பே பல மாநிலங்கள் மதிப்புக்கூட்டு வரியை அறிமுகப்படுத்த சம்மதித்தன. 
இந்த வரி மாநிலங்களுக்கு இடையான வரி விதிப்பில் இருந்த பேதங்களை பெருமளவுக்கு குறைத்து மாநிலங்கள் இடையே வணிகம் சிறப்பாக நடைபெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அடிப்படையில் இது மாநில அரசுக்கு வருவாய் தரும், மாநில அரசால் வசூலிக்கப்படும் ஒரு வரி என்பதால் கொடுக்கப்பட்ட வாய்ப்பு விடைகளில் (d) தவறானது ஆகும். இந்தக் கேள்வி 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டதாகும்.

இந்தக் கேள்வியில் முதல் மூன்று கருத்துக்கள் மதிப்புக்கூட்டு வரி பற்றிய தெளிவான கருத்துகளாக இருப்பதால், அந்தக் கருத்துக்களை மாணவர்கள் மனத்தில் பதித்துக்கொண்டால் பின்னர் தேர்வில் மதிப்புக்கூட்டு வரி பற்றி எழுதச்சொல்லும்போது சிறப்பாக விடை எழுத இந்தக் கருத்துகள் உதவும்.

2. Consider the following:
1. Fringe Benefit Tax
2. Interest Tax
3. Securities Transaction Tax

Which of the above mentioned is/are Direct Tax/Taxes?
(a) 1 only
(b) 1 and 3
(c) 2 and 3
(d) 1, 2, and 3
Ans: (d) 1, 2, and 3

பின்வருவனவற்றைக் கவனிக்கவும்.

1. விளிம்புச் சலுகைகள் வரி
2. வட்டி வரி
3. பங்குச் சந்தை பரிவர்த்தனை வரி

மேலே குறிப்பிட்ட வரிகளில் எது/எவை நேரடி வரி/வரிகள்?
(a) 1 மட்டும்
(b) 1 மற்றும் 3
(c) 2 மற்றும் 3
(d) 1, 2 மற்றும் 3
விடை: (d) 1, 2 மற்றும் 3

வரிச்சுமையை வரி செலுத்துபவரே ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், அந்த வரிக்கு, நேரடி வரி (Direct Tax) என்றும், வரி செலுத்தும் ஒருவர் அந்த வரிச்சுமையை வேறொருவருக்கு மாற்ற முடிந்தால், அந்த வரியை மறைமுக வரி (Indirect Tax) என்றும் பொருளாதாரத்தில் வரையறுப்பார்கள்.

தொழில் வரி (Professional Tax), வருமான வரி (Income Tax) போன்றவை நேரடி வரிகள். சுங்க வரி, கலால் வரி, சேவை வரி போன்றவை மறைமுக வரிகள்.

(தயாராவோம்)
படம்:  தி.குமரகுருபரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP