Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எஸ்பிஐ வங்கி மீது அதிக புகார்கள்!

 எஸ்பிஐ வங்கி மீது அதிக புகார்கள்

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி மீது அதிக புகார்கள் வந்துள்ளன என தமிழ்நாடு , பாண்டிசேரி, அந்தமான் மற்றும் நிக்கோபர் பகுதிகளுக்கான ஆம்புட்ஸ்மேன்  யூ.சிரஞ்சிவி தெரிவித்துள்ளார். அதாவது எஸ்பிஐயின் மீது மட்டும் 2013-14 நிதியாண்டில் 1960 புகார்கள் வந்துள்ளன. இந்தியன் வங்கி மீது 910, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி மீது  740 புகார்கள் வந்துள்ளன. அதே தனியார் வங்கிகளில்  ஐசிஐசிஐ  வங்கி 682 புகார்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹெச்டிஎஃப்சி வங்கி 560, ஸ்டாண்டடர்ட் சாட்டர்ட் வங்கி 440, ஆக்ஸிஸ் வங்கி மீது 326 புகார்களும் வந்துள்ளது. 

இதே கடந்த வருடம் மொத்தமாக 7,255 புகார் வந்துள்ளன. அதே இந்த வருடம் 8,775 புகார்கள் வந்துள்ளன. இதில் 97சதவிகித புகார்களுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. 

கடன் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களினால் பெரும்பாலான புகார்கள் வந்துள்ளன. இதை தவிர்த்து டெபிட் , கிரெடிட் கார்டு மற்றும் ஏடிஎம் சம்பந்தமாகவும் 21 சதவிகிதம் புகார்கள் வந்துள்ளன.



 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ