Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாகனங்களுக்கான புதிய கடன் வசதி அறிமுகப்படுத்துகிறது கார்வி ஃபைனான்ஸ்

 வாகனங்களுக்கான புதிய கடன் வசதி அறிமுகப்படுத்துகிறது கார்வி ஃபைனான்ஸ்

 
கார்வி ஃபைனான்ஸ் நிறுவனம் சிறிய வாகனங்களுக்கான புதிய கடன் திட்டத்தை அரிமுகப்படுத்தியுள்ளது. இந்த கடன் திட்டத்தின் மூலம் 10 லட்ச ரூபாய் வரையுள்ள சிறு வாகனங்களை குறைந்த வட்டிவிகிதத்தில் பெறலாம். கடனை திருப்பி செலுத்த அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை கால அளவை நிர்ணயித்துள்ளது.
 
தற்போது 10 நகரங்களில் மட்டுமே உள்ள இந்த வசதி விரைவில் மற்ற இடங்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் முக்கிய அம்சங்களாக விண்ணப்பித்த நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்குள் கடன் பெறும் வசதி, குறைந்தபட்ச ஆவணங்கள், எளிமையான கட்டணம் செலுத்தும் வசதிகள் போன்றவை உள்ளன என்று கார்வி ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
 
இந்த கடன் வசதி குறு தொழில் முனைவோர் பிரிவுக்கு பலனளிக்கும் விதமாக உள்ளது.அவர்களது கனவுகளை நிஜமாக்க இது பயனுள்ளதாக இருக்கும் என்று கார்வி நிறுவனத்தின் சிஇஓ அமிட் சக்சேனா தெரிவித்துள்ளார்
 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ