Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆர்பிஐ பணவியல் கொள்கையின் எதிர்பார்ப்பு

ஆர்பிஐ பணவியல் கொள்கையின் எதிர்பார்ப்பு
 
- வி.ஆர்.சீனிவாசன், சீனியர் டீலர் ஐபின்

பணவீக்கம் மற்றும் தொழில் வளர்ச்சி காரணமாக ரிசர்வ் வங்கி 
                                                   
பணவியல் கொள்கையின் எதிர்பார்ப்பு?       

நம் நாட்டில் மொத்த விலை குறியீடு பணவீக்கம் (wholesale price index inflation) மே மாதத்தின் 6 சதவிகத்திலிருந்து 5.4 சதவிகிததிற்கும்  மற்றும் நுகர்வோர் விலை குறியீடு பணவீக்கம் (consumer price index inflation)  மே மாதத்தின் 8.28 சதவிகத்திலிருந்து முப்பது மாதத்தின் குறைந்த  அளவான 7.31 சதவிகிதத்திற்கு  குறைந்திருக்கிறது
என்று ஆய்வுகள் வெளிவந்திருக்கின்றன.

இந்த அகில இந்திய அளவிலான ஒரு மாத கால தாமதமான ஆய்வுகள் இப்படியிருக்கும் பொழுதும்  பருவமழை  புதுப்பிக்கும் என்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும்   தற்பொழுது பெரும்பாலான மக்கள் கடும் விலைவாசி உயர்வால் அவதிபட்டுகொண்டுத்தான் இருக்கின்றனர்.    
இந்திய அரசாங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்க்கான நடவடிக்கைகள் எடுத்தும் இது வரை எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது.                                                                                                                                       - வி.ஆர்.சீனிவாசன்

அதே சமயம் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் (index of industrial production) மே மாதத்தில்  2.4 சதவிகிதமாக  இருக்கும் என்று எதிர்பார்த்ததை விட 4.7 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.    தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகஸ்ட் 2011 க்கு பிறகு  இரண்டு மாதங்களுக்கு தொடர்ச்சியாக மூன்று சதவிகிதங்களுக்கு அதிமாக முதல் முறையாக உயர்ந்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் உயர்ந்திருப்பதாலும் உண்மையில் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதாலும்  ரிசர்வ் வங்கி 5 ஆம் தேதி ஆகஸ்ட் மாதம்  தனது கடன் கொள்கையில் வங்கிகளுக்கு  கடன்  கொடுப்பதற்கான கான  வட்டி விகிதங்கள் (repo, reverse repo, statutory liquidity ratio போன்றவைகள் )  மற்றும்   ரொக்க இருப்பு விகிதங்களை (cash reserve ratio) உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ