Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கமாடிட்டி A- Z வர்த்தகம் 2 : தங்கத்தில் வியாபாரம்.

 கமாடிட்டி  A- Z வர்த்தகம் 2

தங்கத்தில் வியாபாரம்.

முதல் கமாடிட்டியாக தங்கத்தை பார்ப்போம்.

இந்தியாவில் பல்வேறு கமாடிட்டி எக்ஸ்சேஞ்கள் உள்ளன. பல்வேறு கமாடிட்டி எக்ஸ்சேஞ்கள் தங்கம் வியாபாரம் செய்தாலும், இந்தியாவில் தங்கம் அதிக அளவில் வியாபாரம் ஆகும், முக்கிய எக்ஸ்சேஞ்ச் எம்.சி.எஸ். ஆகும். தங்கத்தை வாங்கி விற்க அல்லது விற்று வாங்க, இந்த எக்ஸ்சேஞ்சில் உள்ள நடைமுறையை பார்க்கலாம்.

தி.ரா.அருள்ராஜன்,

தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.

 

தங்கத்தின் லாட் சைஸ்கள்:

கோல்டு பெட்டல் = 1 கிராம்

கோல்டு குனியா = 8 கிராம்

கோல்டு மினி = 100 கிராம்

கோல்டு மெகா = 1000 கிராம் (1 கிலோ)

நம்ம ஃப்யூச்சர்ஸ் வியாபாரத்தை பற்றி படிக்கும்போது, அதிக மதிப்புள்ள பொருட்களை வாங்கி குறைவான அளவு பணம் கொடுத்தால் போதும் என்று சொன்னேன் அல்லவா. அதன் பெயர்தான் மார்ஜின் தொகை என்று சொல்லுவோம். தமிழில் விளிம்பு தொகை.

அதன் விவரத்தை இனி பார்போம்.

விளிம்பு தொகையின் தேவை என்ன?

நாம் ஒரு லாட் அளவில் கமாடிட்டியை வாங்கும்போது, நாம் வாங்கிய விலையில் இருந்து அந்த கமாடிட்டி விலை ஏறினால், நமக்கு லாபம் வரும். இது சாதகமான சூழல். இந்த நிலையில் உங்களால் வியாபாரத்தை நடத்தும் எக்ஸ்சேஞ்சுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஒருவேளை நீங்கள் வாங்கிய கமாடிட்டி, நீங்கள் வாங்கிய விலையைவிட குறையும்போது, உங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. உங்களுடைய நஷ்டம், இன்னொருவருக்கு லாபமாக மாறும். எனவே, அந்த நஷ்டம் என்னவோ அதை நீங்கள் எக்ஸ்சேஞ்சுக்கு கட்டவேண்டும். உங்களிடம் வாங்கித்தான், அதை லாபம் சம்பாதித்தவருக்கு எக்ஸ்சேஞ் கொடுக்கவேண்டும். இதைத்தான், எம்.டி.எம்.(MTM) என்று சொல்லுவோம். இதுவும் ஒருவகையான விளிம்பு தொகைதான். ஒருவேளை நீங்கள் இந்த மார்ஜின் தொகையை கட்டவில்லையென்றால், அந்த நேரத்தில், லாபம் அடைந்தவருக்கு எக்ஸ்சேஞ்ச் பணம் கொடுக்கவேண்டும் அல்லவா! அதற்குதான் முன்னதாகவே, ஒரு தொகையை உங்களிடம் இருந்து வசூலித்து வைத்துக்கொள்கிறது, எக்ஸ்சேஞ்ச்.

இப்போது நாம் இரண்டு வகையான மார்ஜின் தொகையை பார்த்தோம்

  1. ஆரம்பத்தில் கட்டவேண்டிய தொகை. (Initial Margin)

  2. நட்டம் வந்தால் கட்டவேண்டிய தொகை. (MTM – Marked To Market)

இப்போது நாம் எடுத்துக்காட்டாக பார்க்கும் கமாடிட்டியான தங்கத்திற்க்கு மார்ஜினாக கட்டவேண்டிய பணத்தின் மதிப்பை அறியவேண்டும். இதை அறியவேண்டுமானால், முதலில் நாம் எந்த லாட் அளவை எடுக்கிறோம் என்பதை தீர்மானிக்கவேண்டும்.

டிரேடிங் யூனிட்.

மேலே தங்கத்தின் லாட் அளவை ஏற்கெனவே பார்துள்ளோம். அடுத்து தங்கம் எந்த விலையில் வியாபாரம் ஆகிறது என்று பார்க்கவேண்டும். பொதுவாக தங்கமானது 10 கிராம் விலையில்தான் சந்தையில் வியாபாரம் ஆகும்.

மார்ஜின் பணம் கணக்கிடும் முறை;

ஒரு லாட்டின் அளவு ஒரு கிலோ என்று எடுத்துக்கொண்டால், அதில் 1000 கிராம் தங்கம் உள்ளது.

இப்போது 10 கிராம் விலை = ரூ.27993/- (21.07.14 அன்று ஆகஸ்ட் கான்ட்ராக்ட்) என்று எடுத்துக்கொண்டால்...

1 கிலோ லாட்டின் விலை = ரூ.27993 X 100 = ரூ.27,99,300/-

நாம் கட்டவேண்டிய மார்ஜின் அளவு 5% = ரூ.27,99,300 X 5% = ரூ.1,39,965/-

இந்த மார்ஜின் அளவு 5% என்பதை அவ்வப்போது அந்த பொருளின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, எக்ஸ்சேஞ்ச் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.

அடுத்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

எக்ஸ்பயரி நாள்;

எக்ஸ்பயரி நாள் என்பது, நான் வாங்கி, விற்க அல்லது விற்று, வாங்க நினைக்கும் கமாடிட்டியை வைத்துக்கொள்ள அனுதிக்கப்பட்ட கடைசி நாள்தான் எக்ஸ்பயரி நாள் என்று அழைக்கப்படுகிறது. கமாடிட்டியில் நாம் வியாபாரம் செய்யும்போது, ஒரு முக்கிய முடிவை எடுக்கவேண்டும். அதாவது, நாம் வியாபாரத்திற்காக வாங்கும் பொருளை, விற்றுவிட எண்ணுகிறோமா? அல்லது, கடைசி நாள்வரை வைத்திருந்து, முழுவிலை கொடுத்து அதை வாங்கிக்கொள்ளப்போகிறோமா? என்பதே.

நீங்கள் வாங்கியதே கடைசி 5 நாட்களுக்கு முன்னதாக விற்கவில்லை என்றால், அது நீங்கள் கட்டாயமாக வாங்க வேண்டிய கட்டத்திற்க்குள் நுழைகிறது. இந்த காலத்தைதான் டென்டர் பிரீயட் என்று அழைப்பார்கள். எனவே வியபாரத்திற்க்கு மட்டும் வாங்குபவர்கள், இந்த டென்டர் பிரீயட்டுக்கு முன்பாகவே விற்றுவிடுவது நல்லது. இல்லை என்றால் முழு பணமும் கொடுத்து வாங்க தயாராக இருக்கவேண்டும். மேலும், டென்டர் பிரீயட் ஆரம்பித்துவிட்டால், டெலிவரி மார்ஜின் என்று கூடுதலாக லாட் மதிப்பில் 25% பணம் கட்டவேண்டி இருக்கும். பின்பு படிப்படியாக முழுத் தொகையையும் கட்டவேண்டி இருக்கும். பொருளை முழுவதும் டெலிவரி எடுக்க முழு பணம் கட்டவேண்டும் அல்லவா? அப்படி கட்ட தவறினால், எக்ஸ்சேஞ்ச் அபராதம் விதிக்கும்.

எக்ஸ்பயரி நாள் என்ன என்பது தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு கான்டிராக்டிக்கும் ஒரு எக்ஸ்பயரி நாள் இருக்கும்.

எடுத்துக்காட்டாக...

ஒரு கிலோ தங்கத்திற்கான கான்டிராக்டுகள் எல்லாம் இரண்டு மாத கால இடைவெளியில் உள்ளது. ஆக ஒரு வருடத்தில் மொத்தம் ஆறு கான்டிராக்ட் சைக்கிள் உள்ளதாக சொல்லலாம். எப்போதுமே அருகாமையில் இருக்கும் கான்டிராக்டில்தான் அதிக அளவு வியாபாரம் நடக்கும். 21.07.2014 அன்று நிலவரப்படி தங்கம் ஒரு கிலோ லாட் அளவில் வியாபாரம் ஆகும் கான்ட்ராக்ட் விவரங்களை பார்க்கலாம்.

  1. தேதி 05.08.2014 வியாபாரம் ஆன கான்ட்ராக்டுகள் - 10773

  2. தேதி 03.10.2014 வியாபாரம் ஆன கான்ட்ராக்டுகள் - 950

  3. தேதி 05.12.2014 வியாபாரம் ஆன கான்ட்ராக்டுகள் - 31

  4. தேதி 05.02.2015 வியாபாரம் ஆன கான்ட்ராக்டுகள் - 1

  5. தேதி 03.04.2015 வியாபாரம் ஆன கான்ட்ராக்டுகள் - 1

 

மேலே உள்ள தேதிகள் எல்லாமே எக்பயரி நாட்கள். அதாவது முடிவு நாட்கள். இன்று நாம் வாங்கினால், எந்த கடைசி நாட்கள்வரை வைத்துக்கொள்ளலாம் என்பதை தெரிவிக்கிறது. ஒவ்வொரு கான்டிராக்ட்டும் தனித்தனியே ஒவ்வொரு விலையில் வியாபாரம் ஆகும். நீங்கள் எந்த தேதி வரை வாங்கிதை அல்லது விற்றதை வைத்திருக்க நினைக்கிறீர்களோ அந்த எக்ஸ்பயரியில் முடியும் கான்டிராக்டை வாங்குவது நல்லது.

ஆனால், உடனடியாக எந்த மாத கான்டிராக்ட் உள்ளதோ, அந்த மாதத்தில்தான் அதிக அளவில் வியாபாரம் நடக்கும். எனவே வியாபாரிகள் எப்போதும் நடப்பு மாத கான்டிராக்டில் கவனம் செலுத்துவது நல்லது.

மேலே உள்ள எடுத்துகாட்டில் ஒரு கிலோ தங்கம், ஆகஸ்ட், 2014 கான்ட்ராக்டில் அதிக அளவில் வியாபாரம் ஆவதை பார்க்கலாம்.

கீழே கொடுக்கப்ட்டுள்ள தகவலில், சில எக்ஸ்பயரிக்கு மார்ஜின் சதவிகிதம் மாறுவதை பார்க்கலாம். அதன் மூலம், நீங்கள் கட்டவேண்டிய மார்ஜின் தொகை என்ன என்பதையும் பார்க்கலாம். இது ஒரு கிலோ தங்கத்திற்கு உண்டான மார்ஜின் பற்றிய விவரம்.

இது ஒரு எடுத்துகாட்டுதான். அந்தந்த மாதங்களில் அது மாறும்.

தங்கத்தில் வியாபாரம் செய்ய 21.07.2014 என்ற தேதியின் அடிப்படையில் விலை மற்றும் மார்ஜின் விவரங்கள். தங்கத்தை பொருத்தமட்டில், எக்ஸ்சேஞ் விதித்துள்ள மார்ஜின் அளவு 5% ஆகும்.

பொருள் எக்ஸ்பயரி விலை யூனிட் லாட் லாட்மதிப்பு மார்ஜின்

GOLD

05-Aug-2014

27993.00

10 GRMS

1 KGS

2799300

139965

GOLD

03-Oct-2014

27966.00

10 GRMS

1 KGS

2796600

139830

GOLD

05-Dec-2014

27952.00

10 GRMS

1 KGS

2795200

139760

GOLD

05-Feb-2015

28349.00

10 GRMS

1 KGS

2834900

141745

GOLD

03-Apr-2015

29240.00

10 GRMS

1 KGS

2924000

146200

 

கமாடிட்டி சந்தயில் வியாபாரம் செய்ய நினைப்பவர்கள், முதலில் மேலே சொன்ன மார்ஜின் தொகையை கட்டுவதோடுமட்டுமல்லாது, ஒரு பொஷிஷன் எடுத்த பிறகு, விலையின் மாற்றத்திற்க்கு ஏற்ப, நீங்கள் நஷ்டத்தில் இருந்தால், MTM என்ற தொகையை கட்டுவதற்க்கும், நட்டம் கூட கூட, ஒருவேளை நீங்கள் நினைத்தபடி விலைமாறும் என்று நம்பும்போது, கூடிய நட்டத்திற்க்கு நீங்க்ள MTM கட்ட தயாராக இருக்கவேண்டும்.

அப்படி நஷ்டம் கூடும்போது, நீங்கள் கூடுதல் பணம் கட்டத் தவறினால், உங்கள் புரோக்கர், உங்கள் கான்டிராக்டை முடித்துவிட வேண்டி இருக்கும். இது எக்ஸ்சேஞ்ச் விதிமுறைக்கு உட்பட்டது.

மேலே நாம் பார்த்தது, ஒரு கிலோ தங்கத்திற்கான விவரம். அதைப்போலவே தங்கத்தின் மற்ற மற்ற லாட் சைசுக்கும் மார்ஜின் அளவு உண்டு. அவற்றை கீழே பார்க்கலாம்.

 

பொருள் எக்ஸ்பயரி விலை யூனிட் லாட் லாட்மதிப்பு மார்ஜின் (%)

கோல்ட் குனியா

ஒரு பவுன்

 

 

 

 

 

 

GOLDGUINEA

31-Jul-2014

22738.00

8 GRMS

8 GRMS

22738

1136

5.00

GOLDGUINEA

28-Aug-2014

22803.00

8 GRMS

8 GRMS

22803

1140

5.00

GOLDGUINEA

30-Sep-2014

22854.00

8 GRMS

8 GRMS

22854

1142

5.00

GOLDGUINEA

31-Oct-2014

22862.00

8 GRMS

8 GRMS

22862

1143

5.00

 

 

 

 

 

 

 

 

கோல்ட் மினி

100கி லாட் அளவு

 

 

 

 

 

 

GOLDM

05-Aug-2014

28028.00

10 GRMS

100 GRMS

280280

14014

5.00

GOLDM

05-Sep-2014

28082.00

10 GRMS

100 GRMS

280820

14041

5.00

GOLDM

01-Oct-2014

28046.00

10 GRMS

100 GRMS

280460

14023

5.00

 

 

 

 

 

 

 

 

கோல்ட் பெட்டல்

ஒரு கிராம் அளவு

 

 

 

 

 

 

GOLDPETAL

31-Jul-2014

2863.00

1 GRMS

1 GRMS

2863

143.15

5.00

GOLDPETAL

28-Aug-2014

2832.00

1 GRMS

1 GRMS

2832

141.60

5.00

GOLDPETAL

30-Sep-2014

2829.00

1 GRMS

1 GRMS

2829

141.45

5.00

GOLDPETAL

31-Oct-2014

2840.00

1 GRMS

1 GRMS

2840

142.00

5.00

GOLDPTLDEL

31-Jul-2014

2896.00

1 GRMS

1 GRMS

2896

144.80

5.00

GOLDPTLDEL

28-Aug-2014

2819.00

1 GRMS

1 GRMS

2819

172.82

6.13

GOLDPTLDEL

30-Sep-2014

2707.00

1 GRMS

1 GRMS

2707

157.17

5.81

GOLDPTLDEL

31-Oct-2014

2960.00

1 GRMS

1 GRMS

2960

148.00

5.00

 

மேலே கொடுக்கப்பட்டுள்ளது, முழுவதும் தங்கம் சார்ந்த விவரங்கள். இதைப்போன்று ஒவ்வொரு கமாடிட்டிக்கும் நீங்கள் கட்டவேண்டிய மார்ஜின் விவரங்கள் உண்டு. அதேபோல், MTM என்பதும் உண்டு என்பதை நினைவில் வைக்கவும்.

அடுத்து- முக்கிய கமாடிட்டிகளின் லாட் அளவுகள் மற்றும் மார்ஜின் விவரங்கள், மற்றும் முக்கிய விவரங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

 

தொடரின் முந்தைய பகுதிக்கு க்ளிக் செய்க

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ