Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி கணக்கைத் தாக்கல்: இன்று முதல் சிறப்பு கவுன்ட்டர்கள்

வருமான வரித்துறை தலைமை ஆணையாளர் டி.ஜெயசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

டி.ஜெயசங்கர்

சென்னை வருமான வரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டர்களில் மாத சம்பளதாரர்கள் தங்களின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

இதற்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் 30 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிறப்பு கவுன்ட்டர்களில் இன்று திங்கள் கிழமை முதல் (ஜூலை 28 ) வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால் செவ்வாய்க் கிழமை (ஜூலை 29) சிறப்புக் கவுன்ட்டர்கள் செயல்படாது. புதன் கிழமை, வியாழக் கிழமைகளில் இந்தக் கவுன்ட்டர்கள் செயல்படும்.

 

இந்த கவுன்ட்டர்களில் காஞ்சிபுரம், தாம்பரம் பகுதிகளைச் சேர்ந்த வருமானவரி செலுத்துவோரும் தங்களது கணக்குகளைத் தாக்கல் செய்யலாம்.


ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக இருப்பவர்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

 

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவான மாத சம்பளதாரர்கள் வரும் 31-ஆம் தேதி வரை வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளவர்கள் தங்களது வருமான வரி கணக்கை ஆன்-லைன் மூலமாகத் தாக்கல் செய்ய வேண்டும்." என்றார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ