Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் - ஜூன் காலாண்டு முடிவுகள்!

ஃபோர்ட்டிஸ் மலர் ஹாஸ்பிட்டல் ஃபோர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம் ஜூன் 30, 2014 ம் தேதி நிலவரப்படி தனது காலாண்டு முடிவை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய ஹெல்த்கேர் சர்வீஸ்களை மக்களுக்கு பல்வேறு முறைகளில் வழங்கி வருகிறது. மிக முக்கியமாக இதய மாற்று அறுவைச் சிகிச்சையில் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

சென்ற காலாண்டில் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 28.58 கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே கால கட்டத்தை விட 10% அதிகம். அதே போல சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை விட கடந்த ஒரு காலாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 12% உயர்ந்து 1.72 கோடியாக உள்ளது. வரிக்கும் முந்தைய வருமானம் 2.81 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.57 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.70 கோடி ரூபாயாக இருந்து இந்த நிறுவனத்தின் நிகர லாபமும் 1.85 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP