Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எஸ்.எம்.இக்களுக்கு உதவும் பங்குச்சந்தை

எஸ்.எம்.இக்களை நிதி தொடர்பாக தரமுயர்த்தும் முயற்சியில் தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் சிட்பியுடன் இணைந்து கோயம்புத்தூரில் இதற்கான முதல் கூட்டத்தை நடத்தியது. இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் எஸ்.எம்.இக்கள் ஏன் பங்குச்சந்தைக்கு வர வேண்டும்? இதனால் அவர்களுக்கு என்ன பயன் என்பது குறித்தும் கூறினர்.
 
 
பட்டியலிடுதல் மூலம் எஸ்.எம்.இக்களுக்கு கிடைக்கும் பயன் குறித்து பேசிய பி.எஸ்.இயின் சிஇஓ ஆஷிஷ் செளஹான் ''எஸ்.எம்.இக்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதன் மூலம் வெளியே உள்ள வர்த்த்கர்களுக்கும் பொதுமக்களுக்கும் எஸ்.எம்.இயை பற்றி அதிகம் தெரியவும் அதன் மதிப்பு கூடவும் வாய்ப்பிருக்கிறது. என்றார்.இந்த நிகழ்ச்சியில் எஸ்.எம்.இக்கள் குரித்து பேசிய என்.எஸ்.இயின் சிஇஓ  சித்ரா ராமகிருஷ்ணா, இது எஸ்.எம்.இக்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு திட்டமாக அரசு அமைத்துள்ளது. பெரிய நிறுவனங்கள் ட்ரேட் செய்யும் பங்குச்சந்தைகளில் எஸ்.எம்.இக்களாலும் ட்ரேட் செய்ய முடியும் என்பதற்கு தற்போது பட்டியலிடப்பட்டுள்ள 63 எஸ்.எம்.இக்கள் ஒரு முன்னுதாரணம் என்றார்.
 
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செபியின் சேர்மர் U.K.சின்ஹா ''எல்லாருக்கும் செபி என்பது போலியான நிறுவங்களை தண்டிக்கும் அமைப்பு அல்லது முறைகேடான நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தடை செய்யும் அமைப்பு என்ற எண்ணம் மட்டும் தான் உள்ளது அதோடு சேர்த்து செபி வெறும் நெறிமுறையாளராக மட்டும் அல்லாமல் மேம்படுத்த உதவும் அமைப்பாகவும் செயல்படுகிறது என்பத்ற்கு இதுபோன்ற திட்டங்கள் தான் உதாரணம். இந்த திட்டங்களை எஸ்.எம்.இக்கள் சிறப்பாக பயன்படுத்தி அதே சமயத்தில் பாதுகாப்பாக வர்த்தகம் செய்ய செபி இவர்களுக்கு உதவும் என்றார். 
 
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது '' எஸ்.எம்.இக்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 10000 கோடி வென்ச்சர் கேப்பிட்டல் நிதியை யார் கையாளுவது என்ற கேள்விக்கு பதிலளித்த சிட்பியின் துணை மேலாண்மை இயக்குநர் மைனி '' அரசு இதுகுறித்து ஆலோசித்து வருகிறது. யார் கையாள போகிறார்கள், அவர்களது பணி என்ன என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றார்.
 
போன்ஸி திட்டங்களில் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தங்கள் பற்றி செபியின் கருத்து பற்றி செபியின் சேர்மர் U.K.சின்ஹாவிடம் கேட்டபோது ''கூட்டு முதலீட்டு திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிரான அரசின் சட்டதிருத்தங்களால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் செபியின் அதிகாரம் கூடியுள்ளது என்றார்
 
படங்கள் : மு.குகன் 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close